ஒரு உண்மையான
சாட்சிக்காரரின் சாட்சி
The Testimony of A True Witness
61-11-05
பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா
1. நன்றி, சகோ நெவில் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. காலை வணக்கம், நண்பர்களே. இக்காலை வேளையில் கர்த்தருடைய வீட்டுக்கு வந்து, இத்தனை ஆண்டுகளாக நாம் ஜனங்களிடம், தேவனுடைய கிருபை நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்பட்டது என்று கூறி வந்த அந்த மிகப் பழமையான வரலாற்றை மறுபடியுமாக கூறுவது ஒரு பெரும்பேறு எனலாம்.
2. இந்த கிருபையை ஆதாரமாகக் கொண்டு நாம் உலகெங்கிலும் உள்ள ஜனங்களுடன் ஐக்கியங்கொள்வதும், எல்லாவிடங்களிலும் தேவனுக்கு ஜனங்கள் உள்ளனர் என்பதும் இன்று மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒருக்கால் அதை ஒருவரிலொருவர் நாம் காண வேண்டிய விதத்தில் காண்ப தில்லை. ஆனால் துயரமடையும் வேளையில் அந்த உண்மையான இயல்பு வெளிப்படுகிறது.
3. இது இக்காலை வேளையில் என் சிந்தனையில் எழுந்த கருத்துக்களில் ஒன்றாகும். நாங்கள் துயரம் கொண்டிருந்த வேளையில், எங்களுடைய தேவையில், நீங்கள் ஒரு குடும்பத்தினராக எங்களுக்குச் செய்ததைக் குறித்து உங்களுக்கு எவ்வகையில் என் நன்றியைத் தெரிவிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நித்தியம் மாத்திரமே அதை தெரிவிக்கக்கூடும் ..... தாயார் பரலோகம் சென்ற போது, நாங்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்த அவ்வேளையில், நீங்கள் எங்களிடம் பாராட்டின அந்த விசுவாசமுள்ள நட்பு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக எங்களுக்கு இருந்தது என்பதை நான் நித்தியத்தில் மாத்திரமே உங்களுக்கு விவரிக்கக்கூடும். ஒருவர் வியாதிப் பட்டிருக்கும்போது அவரைச் சென்று காண்பது எவ்வளவு ஆறுதலைத் தருகிறது என்பதை நான் இப்பொழுது உணரு வதைப் போல் எப்பொழுதுமே உணர்ந்ததில்லை.
4. இத்தகைய பிரச்சினைகள் எனக்கு அடிக்கடி எழுந்ததுண்டு. அதாவது பிணியாளிகளைக் காண எனக்கு அநேக அழைப்புகள் வரும்போது, என்னால் முடியாமல், சில அழைப்புகளுக்கு சென்று எனக்குதவி செய்ய நான் மற்ற போதகர்களிடம் கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால் அது என்னை அழைத்தவர்களுக்கு சிறு ஏமாற்றத்தை விளைவித்தது என்பதையும் பிறகு உணர்ந்து கொண்டேன். ஒருக்கால் அவர்கள் இந்த மற்ற போதகரையும் அழைத்திருக்கக் கூடும், ஆனால் வருவதற்கு அவர்கள் என்னைத் தான் அழைத்தனர். அந்த அழைப்புகள் ஒவ்வொன்றையும் மேற்கொள்ள எனக்கு ஒருவகையான மிகுந்த பெலன் இருந்தால் நலமாயிருக்கும் என்னும் எண்ணம் என்னில் எழுகிறது.
5. ஏனெனில் எனக்குத் தெரிகிறது, வரவேண்டுமென்று நான் வெவ்வேறு ஆட்களை அழைத்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் வந்தது எனக்கு எவ்வளவு திருப்தியை அளித்ததென்று. இரவு நேரத்தில் என் தாயாருடன் உட்கார்ந்து உதவி செய்த இங்குள்ள சகோதரி வில்ஸன், சகோ. பிரட் சாத்மனும் அவருடைய மனைவியும், ஓ. உங்களில் அநேகர். உங்களில் பலர் சேவை செய்ய முன் வந்தீர்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை. எனினும் சேவை செய்ய நீங்கள் முன்வந்தீர்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டி ருந்தால் சில நிமிடங்களுக்கு மாறி மாறி தாயாருடன் உங்களில் பலர் உட்கார்ந்து உதவி செய்திருப்பீர்கள். நீங்கள் மிகவும் அன்பு பாராட்டினீர்கள்.
6. சவ வீட்டில் அவர்களை நாங்கள் கிடத்தியிருந்த நேரத்தில், நீங்கள் எவ்வளவு அன்பாக அங்கு வந்து, எங்களுடன் கைகுலுக்கி, உங்கள் கரங்களை எங்கள் தோள்களின் மேல் போட்டு உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்தீர்கள் ! அது எனக்கு நேரிடும் வரைக்கும், அது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை நான் உணரவில்லை. பூக்கள், பூச்செண்டுகள், பூக்கூடைகள் எல்லாவிடங்களிலு மிருந்து வந்து குவிந்து, அவைகளை சவ அறையில் வைக்க முடியாமல், அறைகளில் வைக்க நேர்ந்தது. எப்படி... மலர்களை அனுப்புவது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று அதுவரை எனக்குத் தோன்றவில்லை.
7. உங்களில் அநேகர் அனுதாப கார்டுகளை வெவ்வேறு இடங்களிலிருந்து அனுப்பி .... செலவுக்கென அதில் கொஞ்சம் பணம் வைத்து அனுப்பியிருந்தீர்கள். இப்படியாக ஒருவருக்கு சிறு வெகுமதியை அனுப்புவது. அப்படிப்பட்ட சிறு செயல்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று. அது எனக்கு நேரிடும் வரைக்கும் நான் உணரவில்லை. தேவன் உங்களை எப்பொழுதும் அபரிதமாய் ஆசீர்வதிப்பாராக.
8. இப்படிப்பட்ட ஆவியைப் பெற்றுள்ள மக்களின் ஒரு பாகமாக நான் இருப்பதற்காக மிக்க மகிழ்வுறுகிறேன். நான் உங்கள் சகோதரன் என்று அறிவது எனக்கு மிக்க மகிழ்ச்சி யளிக்கிறது. இதை இவ்வகையில் நான் திருப்பி அளிக்க நேரிடாமல், வேறெதாவது வழியில் திருப்பி அளிப்பேன் என நம்புகிறேன்.
9. நான் சவ வீட்டில் என் தாயாரின் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த போது, பலர் வந்த வண்ணம் இருந்தனர். அப்பொழுது சிலர், ஏறக்குறைய என் வயதுடையவர்கள், என் கரத்தைப் பிடித்துக் கொண்டு, பில்லி, உங்களைக் கண்டு வெகு நாட்களாயின" என்றனர். அவர்களை நான் பார்த்த போது. அவர்கள் யாரென்று எனக்கு ஞாபகம் வரவில்லை. அவர்களுடைய தோற்றம் அவ்வளவாக மாறியிருந்தது. அவர்கள், "என் குழந்தையின் அடக்கத்தின்போது நீங்கள் பிரசங்கம் செய்தீர்கள், என் தாயாரின் அடக்கத்தின்போது நீங்கள் பிரசங்கம் செய்தீர்கள். ஒரு குளிர்ந்த, இருண்ட இரவின் போது நீங்கள் என்னிடம் வந்தீர்கள். ஆம், அப்படியெல்லாம் அவர்கள் கூறினர்.
10. அது சங்கீதக்காரனின் வார்த்தையை உறுதிப் படுத்துவதாயுள்ளது, அவன் தான் அதை கூறினான் என்று நினைக்கிறேன். அதாவது, "தண்ணீர்கள் மேல் போடப்பட்ட ஆகாரம் என்றாவது ஒரு நாள் உன்னிடம் திரும்ப வரும்" (பிரசங்கி 11 : 1)
11- நான் சொல்வன்மை படைத்தவனாயிருந்தால், உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் என்ன நினைக்கிறேன் என்று கூற விரும்புவேன். ஆனால் என்னால் முடியாது. ஏனெனில் எப்படி அதை தெரிவிப்பது என்று எனக்குத் தெரியவேயில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் நான் என்ன கூறுகிறேன் என்று அறிந்து கொள்ள இவ்விதம் கூறுகிறேன் : என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
12. "ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து. இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்" (கலா. 6 : 2) என்னும் வேதவசனம் எவ்வளவு அழகாக நிறை வேறினது! அது ஒரு .....
13. தாயாரின் மறைவு எனக்கு விசித்திரமான ஒன்றாக இருந்தது. சென்ற முறை நான் இங்கு பிரசங்க பீடத்திலிருந்து அன்று காலை கூறினது போன்று, பரிசுத்த ஆவியானவர் இதை ஏன் முன்கூட்டி எனக்கு அறிவிக்கவில்லை என்று நான் முற்றிலும் உணரவில்லை. அவர்கள் மருத்துவ மனையில் மரித்துக் கொண்டிருப்பதாக எனக்கு அறிவித்தனர். அதை நான் நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் மரிக்கப் போவதாக அவர் என்னிடம் கூறவில்லை. இப்பொழுது நாம் உணருவது என்னவெனில், அவர் அநேக காரியங்களை செய்யலாம், அவரால் செய்ய முடியும், அவர் செய்வார். அவர் நமக்கு எதையும் சொல்ல வேண்டுமெனும் அவசியமில்லை. அவருக்கு விருப்பமானால் நம்மிடம் கூறுவார் ... ஆயினும் இந்த ஒன்றை மாத்திரம் நானறிவேன். அதாவது அவர் சகலத்தையும் நமது நன்மைக்கு ஏதுவாக நடக்கச் செய்கிறார். இன்று காலை நான் படுக்கையில் படுத்துக் கொண்டு அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
14. எங்கள் குடும்பத்தில் முதலாவதாக மறைந்து போனது என் சகோதரன் எட்வர்ட். அவருடைய மறைவின் போது நான் மேற்கு பாகத்தில் ஒரு கால்நடை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நான் வீட்டில் இல்லை. நான் பாவியாயிருந்தபோதே, அவருடைய மறைவுக்கு முன்பு அவரை ஒரு தரிசனத்தில் கண்டேன்.
15. அடுத்தபடியாக மறைந்தது சார்ல்ஸ் . நான்... அவர் வேகமாக திடீரென்று மறைந்து போனார். அவர்... சார்ல்ஸ் நெடுஞ்சாலையில் வாகனத்தினால் கொல்லப்பட்ட அன்றிரவு நான் கறுப்பு நிறத்தவரின் சிறு பெந்தெகொஸ்தே சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன்.
16. அடுத்தபடியாக மறைந்தது என் தகப்பனார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு என் கரங்களில் மரித்துப் போனார். அவருடைய ஆத்துமாவை நான் தேவனிடம் சமர்ப்பித்தேன். அவரும் திடீரென்று வேகமாக காலமானார்.
17. அடுத்தபடியாக மறைந்தது ஹாவர்ட். அப்பொழுது நான் விடுமுறைக்காக மேற்கு பாகத்தில் ஒரு ஆற்றினருகில் இருந்தேன். திரும்பி வரமுடியவில்லை. விமானங்கள் அங்கு பறந்து வந்து சிறு 'பாரசூட்டுகளின்' மூலம் அவர் போய் விட்டார்" என்று அறிவித்தன. ஆனால் அவர் மரிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அவர் மரிப்பதை நான் கண்டேன். அவர் மரித்து விடுவார் என்று நாங்கள் அறிந்திருந்தோம்.
18. ஆனால் தாயார் மாத்திரமே வியாதிப்படுக்கையில் இருந்தார்கள். அதன் காரணமாகத் தான் அவர் என்னிடம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மற்றவர் அனைவரும் திடீரென்று போய்விட்டனர், ஏன், அவர்... தாயாரைத் தவிர மற்றவர் எல்லாம் சடுதியாக போய் விட்டார்கள். ஆனால் தாயார் மாத்திரமே ஏறக்குறைய ஆறு வாரங்கள் படுக்கையில் கிடந்திருந்தார்கள், சரியாக ஆறு வாரங்கள்.
19. இதை நான் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். என் தாயாரின் மறைவின் போது அவர்கள் அருகில் நின்று கொண்டு அவர்களுடைய ஆத்துமாவை தேவனிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமெனும் விருப்பம் எனக்கிருந்தது. ஏதோ வினோதமான ஒன்று என்னை அக்காலையில் மருத்துவமனைக்கு அனுப்பினது - என்னையும் மனைவியையும். அவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தார்கள். நான் அவர்களிடம் பேசின போது அவர்கள் கடைசியாக புரிந்த செயல் என் நினைவில் உள்ளது. அவர்களால் பேச முடியவில்லை. நான் அவர்களிடம், அம்மா, நீங்கள் இன்னமும் கிறிஸ்துவில் அன்புகூர்ந்து, அவர் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லா மாக இருந்தால், உங்கள் தலையை அசையுங்கள்" என்றேன். அவர்கள் தலையை அசைத்தார்கள். அப்பொழுது கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிந்தோடினது. பாதையின் முடிவிலும் அவர் எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருந்தார். அவர்களுடைய கன்னத்தை தட்டிக் கொடுத்து. அவர் களுடைய முகத்தை என் கைகளினால் இழுத்து, அம்மா . நீங்கள் உண்மையான போர் வீரர். உங்களைக் குறித்து நான் பெருமையடைகிறேன்' என்றேன்.
20. சாத்தான் யோபுவின் நாட்களில் கூறினது போல. இப்பொழுது என்ன கூறியிருப்பான் என்று வியக்கிறேன்" என்று எண்ணினேன். உங்களுக்குத் தெரியும், தேவன் நமது ஜீவனை எடுக்க முடியாது. சாத்தான் தான் அதை செய்ய வேண்டும். நாம் சாத்தானிடம் ஒப்படைக்கப்படுகிறோம்.
21. சாத்தான் அதை அறிந்தவனாய் அவர்களுடைய வேளை வந்து விட்டதென்றும், அவர்கள் போக வேண்டு மென்றும் அறிந்தவனாய், தேவனிடம், "உமக்குத் தெரியும். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஒரு போதகர். அவளுடைய மற்ற பிள்ளைகளும் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர். அவளை சிறிது காலம் துன்புறுத்தி, அவர்கள் எல்லோரும் உம்மை மறுதலிக்கும்படி செய்கிறேன்” என்று கூறியிருப்பான்.
22. தேவனுடைய கிருபையினால் அப்படி நடக்கவில்லை. அவர்களுடைய மறைவுக்கு முன்பு அவர்கள் புரிந்த கடைசி செயல், தலையை ஆட்டி , கிறிஸ்து அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கிறார் என்பதை அறிவித்ததே.
23. நான் வீடு திரும்பின போது, "நல்லது, அதுவல்லவா..." என்று எண்ணினேன். நான் உள்ளே சென்று, அறையில் உட்கார்ந்து, வேதாகமத்தை கையிலெடுத்தேன் - ஒரு புதிய வேதாகமம். நான், "கர்த்தாவே, நீர் தேவன். நான் .... நீர் செய்யப்போவதை என்னிடம் கூறவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்களை எடுத்துக்கொள்ளப் போவதை எனக்கு நீர் மறைத்த காரணம் என் இருதயம் உடைந்து விடக்கூடாதென்றா? அப்படியானால் உமது வார்த்தையினால் என்னை ஆறுதல் படுத்தும்" என்று சொல்லி,
24. வேதாகமத்தை திறந்தேன். ஒரு வேதாகமத்தை எடுத்து அதை இப்படி திறப்பது உங்களுக்குத் தெரியும். என் விரல்களை வேதாகமத்துக்குள் நுழைத்து அதை திறந்தேன். அப்பொழுது மத்தேயு 9ம் அதிகாரம் கிடைத்தது. அதில் சிகப்பு கொட்டை எழுத்துக்களில், "இவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்" என்றிருந்தது. பாருங்கள், நான் பார்த்தபோது, என் கண்களில் பட்ட முதலாம் வேதவசனம்.
25. நான் வேதாகமத்தை குறி சொல்லும் பலகையைப் போல் (Ouija board) உபயோகிப்பதில்லை . அது உங்களுக்குத் தெரியும். நாம் அப்படி செய்வதில்லை. ஆனால் அந்நேரத்தில் நான் அதிக துயரமுற்றவனாய், தேவன் அதைக் காணச் செய்வார் என்று நம்பினேன். அதைத் தொடர்ந்து கிடைத்த வேதவசனம் அது சரியென்று நிரூபித்தது.அன்றிரவு எனக்கு உறக்கமற்ற இரவாய் இருந்தது.
26. அடுத்த நாள் காலையில் நான்..... படுக்கையை விட்டு எழுந்தேன். அப்பொழுது எட்டு மணியிருக்கும், அல்லது அதைக் காட்டிலும் நேரமாகியிருக்கும். நான் அறையி லிருந்தேன். நான் பார்த்தபோது, பிள்ளைகள் ஊனமுற்ற பிள்ளைகளை எல்லாவிடங்களிலுமிருந்து உள்ளே கொண்டு வருவதை தரிசனத்தில் கண்டேன். அது ஒரு 'நகர் பிளாக்' அகலமும், இரண்டு நகர பிளாக்' நீளமும் கொண்ட இடத்தில் ஊனமுற்ற பிள்ளைகள் உட்கார்ந்திருந்தது போன்றிருந்தது. இடது பாகத்திலும் வலது பாகத்திலும் ஜனங்கள் நெடுக உட்கார்ந்து கொண்டிருந்தனர். அது சற்று உயரமான இடம் போன்றிருந்தது. அது ஒருவிதமான அரங்கம் போல் முன்பாகத்தில் தாழ்ந்ததாகவும், பின்பா கத்திலுள்ள ஜளங்கள் முன்னால் காணத்தக்கதாக சற்று உயர மாகவும் காணப்பட்டது. நான் ஊதா 'சூட்' போட்டுக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தேன். இது என்ன விசித்திரமாயுள்ளதே! நான் வீட்டில் அறையில் நின்று கொண்டிருக்கிறதை அறிகிறேன். ஆனால் அங்கு ஊதா சூட்' அணிந்திருக்கின்றேனே" என்று எண்ணினேன்.
27. நான், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்" என்னும் பாடலைப் பாடத் துவங்கி, இரு பக்கங்களிலுமுள்ளவர், "சிறு பிள்ளைகளை இயேசுவினிடம் கொண்டு வாருங்கள், அவர்களைப் பாவ உலகிலிருந்து கொண்டு வாருங்கள்" என்னும் பாடலின் மற்ற பாகத்தை பாடும்படி செய்தேன்.
28. அப்பொழுது பிரபலமான ஒரு சீமாட்டி அரங் கத்தின் பின்வாசலின் வழியாக பிரவேசித்தார்கள். அவர்கள் உள்ளே வருகிறார்கள் என்பதை நான் எப்படியோ அறிந்து கொண்டேன். அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களின் மத்தியில் நடந்து சென்றார்கள்.
29. நான், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்" என்று பாட, இந்த பக்கத்திலுள்ளவர்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்" என்றும் அந்த பக்கத்திலுள்ளவர்கள், அலைந்து கொண்டிருப்பவர்களை இயேசுவினிடம் கொண்டு வாருங்கள்' என்றும் ஒன்றன் பின் ஒன்றாக பாடிக் கொண்டிருந்தனர்.
30. நான் அங்கு கூடியிருந்த ஊனமுற்ற, வியாதிப் பட்டிருந்த சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்க ஆயத்தமானேன்.
31. அந்த சீமாட்டி உள்ளே வந்து, சினிமாக் கொட்டகைகளில் உள்ளது போன்ற ஒரு தனி இடத்தில் (box)- அதாவது புகழ் வாய்ந்தவர் அல்லது ஜனாதிபதிக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள அப்படிப்பட்ட தனி இடத்தில் - போய் உட்கார்ந்தார்கள். நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன் - என் இடது பக்கத் திலுள்ள அப்படிப்பட்ட ஒரு இடத்தில்.
32. அந்த சீமாட்டி உள்ளே வந்து உட்கார்ந்தவுடன், அங்கிருந்த ஜனங்களிடம் திரும்பி தலைவணங்கி வணக்கம் தெரிவித்தார்கள். அவர்கள் பழமை நாகரீகமுள்ள உடை உடுத்தியிருந்ததை நான் கவனித்தேன். அதற்கு முன்பு, அவர்கள் தலைவணங்கி வணக்கம் தெரிவிக்க என் பக்கம் திரும்பினார்கள். நான் பிரசங்கம் செய்ய பிரசங்க பீடத்துக்கு நடந்து கொண்டிருந்தேன். அவர்கள் தலைகுனிந்திருந்த போது, நான் அவர்கள் பக்கம் இப்படி திரும்பினேன்.
33. நான் தலைநிமிர்ந்த போது, அவர்களும் என் முகத்துக்கு நேரே தலை நிமிர்ந்தார்கள். அது என் தாயார். அவர்கள் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தார்கள். அவர்கள் வாலிபமாக, உண்மையில் வாலிபமாக காணப்பட்டார்கள். அப்பொழுது இடிமுழக்கம் போன்ற ஒரு பெரிய சத்தம் உண்டாகி அந்த இடத்தை அசைத்தது. அதிலிருந்து, அவர்களைக் குறித்துக் கவலை கொள்ளாதே. அவர்கள் 1906ம் அண்டில் காணப்பட்டது போல் இப்பொழுது இருக்கிறார்கள் என்னும் சொற்கள் எழுந்தன.
34. அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கின பிறகு, 1906ம் ஆண்டில் என்ன நடந்ததென்று நோக்கினேன். அந்த ஆண்டில் அவர்கள் என் தகப்பனாருக்கு மணவாட்டியாக அவரை விவாகம் செய்தார்கள். இப்பொழுதும் கூட அவர்கள் மணவாட்டியின் ஒரு பாகமாக - இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக - இருக்கிறார்கள் என்றறிவேன்.
35. நான் எப்பொழுதுமே என் தாயைக் காணாமல் வருந்துவேன். அவர்கள் எங்கள் அனைவருக்கும் இனிமை யாகவும் அருமையாகவும் இருந்தார்கள். திமிர்வாதத்தின் விளைவாக நடுங்கிக் கொண்டிருந்த அவர்களுடைய வயோதிப கரங்கள் டிலோரஸ் ஆடாமல் நிறுத்தி, அவர்களுக்கு இராப்போஜனம் கொடுத்தது என் நினைவுக்கு வருகிறது. அதுதான் கடைசி முறையாக இந்த கூடாரத்துக்கு அவர்கள் வந்தது. அதன் பிறகு அவர்களடைய சவம் இங்கு வந்து பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
36. வேறொன்றைக் கூற விரும்புகிறேன். தாயாருக்கு என்ன நேரிடுமோ என்று சொல்லமுடியாத அந்த நிலையை அடைந்தபோது, அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக போய் விடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. சகோ. நெவில் வீட்டுக்கு வந்திருந்தார். நான் எப்பொழுதாவது சகோ. நெவிலைக் கண்டபோது மகிழ்ச்சி கொண்டிருந்தால் அது அத்தருணமே என்று மனைவி கூறினாள் ..... ஏனென்று தெரியவில்லை, ஏதோ ஒன்று, தேவன் இவைகளை அவ்வாறு நடத்துகிறார். சகோ. ஹிக்கின்பாதமும் அங்கிருந்தார் - சற்று முன்பு இங்கு அந்த செய்தியை அளித்தவர். அவர் நடந்து வந்தார். அவர் அறையின் கதவருகில் நின்றார், சகோ. நெவில் உள்ளே வந்தார். நான் பிள்ளைகளை தாயாரின் படுக்கையை சுற்றி நிற்கச் செய்து. "நாம் சூழ நிற்போம்.. சகோ நெவில் ஜெபம் செய்வார்" என்றேன்.
37. சகோ. நெவில் ஜெபம் செய்வதைக் கேட்க அம்மாவுக்கு எப்பொழுதுமே ஆவல். "அவர் ஊக்கமாக தேவனுடன் பேசுவது போல ஜெபம் செய்கிறார்" என்று அவர்கள் கூறுவதுண்டு.
38. சகோ. நெவில் நின்று கொண்டு ஜெபம் செய்ததை அவர்கள் காதுகளில் கேட்டது அதுவே கடைசி தருணம். அவர் ஜெபம் செய்தபோது, என் ஒரு கையை அவர்கள் தலையின் மேல் வைத்து, மறு கையினால் அவர்களுடைய கரத்தை பிடித்துக் கொண்டிருந்தேன். அவர் ஜெபித்துக் கொண்டிருந்த போதே. தேவன் அவர்களை அழைத்துக் கொண்டார். அந்த சிறு இழுப்பை என்னால் உணர முடிந்தது. நான் சுற்றிலும் பார்த்தேன். அவர்கள் தலையை திருப்பி என்னைப் பார்த்தார்கள். அவர்கள் போகிறார்கள் என்று நான் அறிந்து கொண்டேன். எனவே நான், சர்வ வல்லமையுள்ள தேவனே, இவர்களுடைய ஆத்துமாவை இப்பொழுது உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன் என்றேன். அவர்கள் ...... காற்று அறைக்குள் வந்தது போன்றிருந்தது. அவர்கள் தேவனைச் சந்திக்க சென்று விட்டார்கள். எனவே, ஒரு மகிமையான நாளில் அவர்களை ஒரு வாலிப ஸ்திரீயாக மறுபுறம் சந்திப்பேன்.
39. இங்கு நாம் அவர்களை தேக ஆரோக்கியமற்ற, கரங்கள் நடுங்கும் தாயாகவே அறிவோம். ஆனால் அவர்களுடைய இளமையில் அவர்கள் பத்து பிள்ளைகளை ஈன்றெடுத் தார்கள். அக்காலம் இன்று நமக்குள்ளது போல் அல்ல. எங்களுக்கு நவீன சாதனங்கள் எதுவும் இருக்கவில்லை. அதற்கான பணம் எங்களுக்கு இல்லை. காலையில் தாயார் குழந்தையை பார்த்துக் கொண்டால், பிற்பகலில் துணிகளை துவைப்பார்கள். அது அவர்களுடைய ஆரோக்கியத்தை குலைத்துப் போட்டது.
40. அப்பாலுள்ள ராஜ்யத்தில் அவர்கள் திமிர்வாதம் கொண்ட, கரங்கள் நடுங்கும் தாயாக இராமல், அழகான வாலிபப் பெண்ணாக இருப்பார்கள்.
41. அந்த நேரத்தில் என்னை அங்கு கொண்டு சென்ற தேவனுடைய ஆறுதலை நான் நினைத்துப் பார்த்தேன். அதெல்லாம் முடிந்த பிறகு, ஏனென்று என்னிடம் கூறினார். அதன் பிறகு, என் தாயாரை தரிசனத்தில் காணும்படி செய்து, எனக்கு ஆறுதலான வார்த்தைகளை அருளினார்.
42. எனவே, நண்பர்களே, நான் உறுதியாக நிலைநின்று வந்துள்ள அந்த சுவிசேஷம் மரண நேரத்தின் போது என்ன செய்ததென்று கவனித்தேன். அது என் தாயாருக்கு என்ன செய்ததென்று கண்டேன், என் மனைவிக்கு என்ன செய்ததென்று கண்டேன், என் சகோதரருக்கு என்ன செய்ததென்று கண்டேன்: தேவனுடன் அனுபவம் பெற்று பாதையின் முடிவுக்கு நீங்கள் வருவது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அறிந்திருக்கிறேன். அது முக்கியம் வாய்ந்தது. எனவே தேவனுடைய கிருபையினால், அவர் என்னை அனுப்பும் உலகத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் சென்று, என்னால் கூடுமானவரைக்கும் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன் என்று இப்பொழுது தீர்மானம் செய்திருக்கிறேன். ஏனெனில் இரட்சிக்கப்படுகிறதற்கு அது தேவ பெலனாயுள்ளது.
43. இந்த வாழ்க்கை முடிவுபெற்ற பின்பு, மறுபுறத்தில் நமக்கு ஒரு வாழ்க்கை உண்டென்று அறிந்திருக்கிறேன். அப்பொழுது நாம் வாலிபர்களாக மாறி, அவருடைய சமுகத்தில், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களாய், என்றென்றைக்கும் வாழ்வோம். இங்குள்ள விலையேறப்பெற்ற ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும், ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு தகப்பனும் கர்த்தருக்குள் மரிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆவியானவர் ஆம் என்றும் திருவுளம் பற்றுகிறார். அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்க ளோடே கூடப்போம். ஒரு பிரகாசமான நாளில் நாம் சென்று அவர்களைக் காண்போம்! ஆம்.
44. அவ்வாறு இல்லாமல் போனால், நாம் ஏன் இன்று காலை இங்கு நின்று கொண்டு விருதாவாகப் பிரசங்கிக்க வேண்டும்? நண்பர்களே, நமது மார்க்கம் விருதாவாய் போவ தில்லை. அது தேவனுடைய வல்லமையாயிருந்து, மரணம் என்னும் அமிலப் பரிசோதனையால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மரணம் சரீர அவதிகளின் மூலமாகவும், அல்லது வேறெந்த விதத்திலும் வரட்டும். அதனால் என்ன வித்தியாசம்? நாம் தேவனைச் சந்திக்கப் போகிறோம்.
இங்கு எல்லோருக்கும் இருக்கைகள் இருந்தால் நலமா யிருக்கும்.
45. இந்த அறிவிப்பைச் செய்ய - விரும்புகிறேன், இன்றிரவு இராப்போஜனம் இருக்குமென்று நினைக்கிறேன். அது சரியா, சகோ. நெவில்? (அது சரி" என்று சகோ. நெவில் விடையளிக்கிறார் - ஆசி). இன்றிரவு இராப்போஜன இரவு . ஒவ்வொருவரும் 
46. இராப்போஜனத்தைக் குறித்த ஒன்று என் சிந்தையில் எழுந்தது. அன்றொரு நாள் ஒரு குறிப்பிட்ட நபர் சபைக்குச் சென்றார். அவரை சபைக்கு கொண்டு செல்ல ஒரு வாடகை கார் அவருக்கு அவசியமாயிருந்தது. அவர் பரம ஏழை. அவர் சென்று இராப்போஜனம் எடுத்தார். அவருடைய அண்டை வீட்டுக்காரன் ஒரு விதமான ... தேவனை அறியாத ஒருவிதமான தன்னிச்சையாக நடக்கும் மனிதன். அவன் தன் அண்டை வீட்டானிடம், வாடகை காரில் இன்று காலை எங்கு சென்றீர்கள்? என்று கேட்டான்.
47. அவர் .... அவருடைய மேசையின் மேல் ஆகாரம் எதுவுமே இல்லாத பரம ஏழை அவர். அவர், "சபையில் இராப்போஜனம் ஆசரிக்கப்பட்டது. இராப்போஜனம் எடுக்க அங்கு நான் சென்றிருந்தேன்' என்றார்.
இவன், இராப்போஜனம் என்றால் என்ன?" என்று கேட்டான்.
அவர், அது கர்த்தருடைய அப்பமும் திராட்சரசமும் என்று விளக்கிக் கொடுத்தார்.
48. அவன், "நானும் கூட அதை உட்கொண்டேன். ஒரு தட்டு நிறைய பிஸ்கோத்துக்களைத் தின்று, இரண்டு பைண்ட் விஸ்கி குடித்தேன்" என்றான். அந்த நேரத்திலேயே அவனுக்கு உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டது. அவன் எந்த நேரத்திலும் மரிக்கக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க் கின்றனர். மார்க்கத்தைத் தூஷிக்காதீர்கள், அவபக்தியாயிரா தேயுங்கள். பாருங்கள்? கர்த்தருடைய வார்த்தைக்கு மரியாதை கொடுங்கள், பாருங்கள். ஏனெனில் நாம் எந்த நிமிடத்தில் அழைக்கப்பட்டு தேவனிடத்தில் பதில் கூற வேண்டுமென்று நமக்குத் தெரியாது.
49. (யாரோ ஒருவர், "இன்றிரவு இங்கு வருவீர்களா? என்று கேட்கிறார் - ஆசி). என்னை மன்னியுங்கள். ( இன்றிரவு இங்கு வருவீர்களா?"). நான் வரவேண்டுமெனும் நோக்க முடையவனாயிருக்கிறேன். ஆம். இன்றிரவு இங்கு வருவேனா என்று அவர்கள் கேட்டார்கள். இன்றிரவு, என்னால் முடிந்தால், ஒரு நல்ல பிரசங்கியின் பிரசங்கத்தைக் கேட்க வேண்டுமெனும் நோக்கமுடையவனாயிருக்கிறேன் - சகோ. நெவிலின் பிரசங்கத்தை. ஒவ்வொரு இராப்போஜன இரவின் போதும் நான் வரவேண்டுமெனும் நோக்கத்தைக் கொண்டவன் - நம்மால் கூடுமானவரை. அது நமது கடமையாகும்.
50. அது சரியென்றால், அது தேவனுக்கு பிரீதியா யிருக்குமென்றால், அது சபைக்கும் சகோ. நெவிலுக்கும் பிரீதியாயிருக்குமென்றால், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறன்று இங்கு மறுபடியும் வர விரும்புகிறேன். (சகோ. நெவில், ஆமென்' என்கிறார் - ஆசி). அது பரவாயில்லை என்றால், பாருங்கள் ("ஓ , ஆமென்! ஆம்").
51. என்னால் கூடுமான வரைக்கும், நான் ஒவ்வொரு அவுன்சையும், என்னில் விடப்பட்டுள்ள பெலன் அனைத் தையும் தேவனுடைய ராஜ்யத்துக்கென அளிக்க விரும்புகிறேன்; இரட்சிக்க நான் அறிந்துள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சிக்க. ஏனெனில், அம்மா கிறிஸ்தவள் அல்லாதிருந்தால், இன்று காலை நான் என்ன செய்திருப்பேன்? நமக்கு மறுபுறத்தின் ஆசீர்வாதமான நம்பிக்கை இல்லாமல் போனால்? நான்.....
52. எனக்கு ஞாபகமுள்ளது. முப்பத்தோறு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டிற்கு கீழே அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். என் வீட்டிற்கு கீழே ஒரு ஆறு உள்ளது. அவர்கள் இப்பொழுது வந்து என்னைக் கட்டித் தழுவுவதை என்னால் காண முடிகிறது. அது மிகவும் முக்கியம் வாய்ந்த தாயிருந்தது. நான், 'அம்மா, என்றாவது ஒரு நாள் நாங்கள் உங்களை மண் கல்லறையில் வைப்போம். ஆனால் விசுவாச முள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்" என்றேன். ஆம், ஆமாம்.
53. எனவே என் தாயாரைத் தவிர வேறெந்த ஆத்துமாவையும் நான் தேவனுக்கென இரட்சிக்காமல் போனாலும். என் முயற்சி ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பலனை திரும்ப அளித்து விட்டது. ஆம், ஆம், ஐயா. அது உண்மை!
54. இப்பொழுது வேதபாகத்தைப் படிப்போம். நான் இரண்டு வேதபாகங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். அவைகளில் ஒன்றை முதலில் படிக்கலாம். அதன் பிறகு நாம் ஜெபம் செய்வோம். ஜெபம் செய்து விட்ட பிறகு மற்ற பாகத்தைப் படிக்கலாம். என்னுடன் கூட சேர்ந்து படிக்க விரும்புகிறவர்கள் உங்கள் வேதாகமங்களை அப்போஸ்த லருடைய நடபடிகள் முதலாம் அதிகாரத்துக்கு திருப்புங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இன்று காலை நான் பேசவிருக்கும் பொருளை அறிவிக்க விரும்புகிறேன். அதற்கு காரணம்..... பேசுவதற்கு இங்கு அநேக வேத வசனங்களையும் குறிப்பு களையும் எழுதி வைத்துள்ளேன். உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொள்ள மாட்டேன்.
55. நான் அறையில் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். பிரயோஜனமுள்ளதாயிருக்கும் என்று நான் கருதும் எதையும் கர்த்தர் எனக்கு அளிக்காமல் போனால்.....
56. நான் காணப்பட வேண்டும் என்பதற்காக இங்கு வருவதில்லையென்று இந்த சபையோரும் மற்றலெலாரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நமக்கு ஒரு போதகர் அவசியம் என்பதற்காக இங்கு நான் வருவதில்லை. ஏனெனில் நமது போதகர் தேசத்திலுள்ள சிறந்த போதகர்களில் ஒருவர் என்பது என் கருத்து. அது முற்றிலும் உண்மை . அதுவல்ல.
57. இங்கு நான் வரும் காரணம் என்னவெனில், இந்த ஜனங்களுக்கு உதவியாயிருக்க தேவன் என் இருதயத்தில் ஒரு செய்தியை அளித்துள்ளார் என்னும் உணர்வு உள்ளதாலே. பாருங்கள், அவர்களுக்கு உதவியாயிருக்கும் ஒன்று. இந்த விலையேறப்பெற்ற சகோதரனுடன் கூட சேர்ந்து கொண்டு, நாங்கள் இருவரும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டவர்களாய், எங்கள் நேரத்தை நாங்கள் ஒன்றாக வைத்து. அதை வீணாக செலவழிக்காமல், எங்களால் கூடுமான வரைக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சிக்க முயல்கிறோம். இன்று காலை இங்கு நான் வந்திருக்கும் காரணம், சபைக்கு உதவியாயிருக்கும் ஒரு செய்தியை பரிசுத்த ஆவியானவர் எனக்களித்துள்ளார் என்னும் உணர்வு எனக்கு ஏற்பட்டதால். ஆகையால் தான் நான் இங்கிருக்கிறேன்.
58. இப்பொழுது, அப்போஸ்தலருடைய நடபடிகள் முதலாம் அதிகாரம் நாம் முதலாம் வசனத்திலிருந்து படிப்போம்:
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டு பண்ணினேன்.
அவர் பாடுபட்ட பின்பு, நாற்பது நாள்ளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ் யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளி வான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும் போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்களோ சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ஆகையால் நீங்கள் எரு சலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
அப்பொழுது கூடி வந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ர வேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் : பிதாவானவர் தம்முடைய ஆதிக்கத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரி யாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சி களாயிருப்பீர்கள் (witness) என்றார்.
இவைகளை அவர் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக் கொள்ளப் பட்டார் '; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக் கொண்டது.
அவர் போகிற போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப். 1: 1-11 
59. ஜெபத்துக்காக சிறிது நேரம் நாம் தலைவணங்குவோம் :
60. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மை அணுகுகிறோம் - முதலாவதாக நீர் எங்களுக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்கும் உமக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்னும் ஆசீர் வாதமான நம்பிக்கை எங்கள் இருதயங்களில் உள்ளதற்காகவும். நாங்கள் மரணத்தினின்றும், பாதாளத்தினின்றும், இவ்வுலக காரியங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தேவ குமாரனுடைய மகத்தான கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தாவே, இதற்காக உம்மை எவ்வளவாக நேசிக்கிறோம் ! அது எங்களுக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானது; அது நித்திய ஜீவன்!
61. கர்த்தாவே, இதை பாடல்கள், நன்றி செலுத்துதல், வார்த்தையைப் பிரசங்கித்தல், என்பவைகளின் மூலம் தெரியப்படுத்தவும் ; கர்த்தாவே, உம்மை அறியாதவர்கள் ஒருக்கால் இங்கு இருப்பார்களானால் அவர்களுக்கு உமது ஜீவ வார்த்தையை பிட்டுக் கொடுக்கவும் இன்று காலை நாங்கள் கூடி வந்திருக்கிறோம். உம்மை அறிந்திராத அநேகர் இன்று உம்மண்டை வந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டதால், அவர்கள் பாவங்கள் போக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆவலும் எங்கள் நோக்கமுமாயுள்ளது. பிதாவே, நீர் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியினால் நிரப்ப வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். ஏனெனில் அதுவே தேவன் எங்களுக்கு அளித்துள்ள வாக்குத்தத்தத்தின் முத்திரை யாயுள்ளது.
62. வியாதிப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களையும் தேவையுள்ளவர்களையும் இன்று நீர் நினைவுகூர வேண்டுமென்று உம்மை கேட்டுக் கொள்கிறோம். உண்மையாகவே உலக மானது இன்று தேவையுள்ள நிலையில் உள்ளது. ஏனெனில் எங்கள் பாதுகாப்புக்காகவும் அடைக்கலத்துக்காகவும் நாங்கள் உம்மிடம் திரும்புவதில்லை.
63. வேதாகம காலங்களிலே ஜனங்கள் தொல்லையிலும் கஷ்டத்திலும் இருந்தபோது அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் சென்றதை இக்காலை வேளையில் நாங்கள் எவ்வளவாக நினைத்துப் பார்க்கிறோம்! அந்நாட்களிலிருந்த மேதைகளில் பலர், இந்த தீர்க்கதரிசிகள் பயங்காளிகள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும் எண்ணியிருந்தனர். ஒருக்கால் அவர்கள் அவ்வாறு இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டவர்களாயிருந்தனர். தேவனே, இன்று நாங்கள் தேவனுடைய வார்த்தையை மறு படியும் படித்து ஆலோசனை பெறுவது எவ்வளவு அவசிய மாயுள்ளது! அவர்கள் முடிவு காலத்தைக் குறித்தும் என்ன நடக்குமென்றும் நமக்கு அறிவித்துள்ளனர். நாங்கள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக அவர்களுடைய சாட்சியைப் படித்து, உலகத்துக்கு நாங்கள் சாட்சி கொடுக்கும்படி செய்வீராக. கர்த்தாவே . இதை அருளும்.
64. இன்று காலை எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்துவீராக. கர்த்தாவே, களைப்புற்ற சோர்ந்து போன வியாதிப்பட்ட சரீரத்தைக் கொண்டு நடப்பவர்கள், ஆரோக்கியமுள்ளவர்களைப் போல் தேவனுடைய ஆசீர்வா தங்களை அவ்வளவு நன்றாக அனுபவிக்க முடியாதென்பதை உணருகிறோம்.நாங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தும், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிலாக்கியத்துக்கு மிகவும் குறைவாகவே வாழ்கிறோம் என்பதை உணருகிறோம். அவ்வாறு நாங்கள் களைப்புற்று, சோர்ந்து. பெலன் குன்றி, பலவீனமாயிருப்பது - உமக்குப் பிரியமல்ல. நாங்கள் தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்க வேண்டுமென்பதே உமது வாஞ்சையாயுள்ளது. உமது செய்திக்காக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கும் இந்நேரத்தில், பிதாவே, இதை அருளுவீராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
65. நீங்கள் மறுபடியும் வேதாகமத்தை பரி. யோவான் 3ம் அதிகாரத்துக்கு திருப்புவீர்களானால் ; நான் பரி. யோவான் 3ம் அதிகாரத்தில் 31ம் வசனம் தொடங்கி சில வசனங்களை - ஏறக்குறைய மூன்று வசனங்களை - நான் கூற நினைத்திருக்கும் பொருளுக்காக படிக்க விரும்புகிறேன். இது இயேசு உரைப்பது. பரி. யோவான் 3 :31. அவருடைய வார்த்தையை உன்னிப்பாக கவனியுங்கள்
உன்னதத்திலிருந்து வரு கிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வரு கிறவர் எல்லாரிலும் மேலானவர்.
தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாக சொல்லுகிறார் ; அவருடைய சாட்சியை (testimony) ஒருவனும் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.
அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
யோவான் 3 : 31 -33
66. 33ம் வசனத்தை வலியுறுத்த நான் மறுபடியும் அந்த வசனத்தை படிக்கிறேன்
அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
67. இன்று காலைக்குப் பொருளாக..... ஒரு உண்மையான சாட்சிக்காரரின் சாட்சி என்பதை உபயோகிக்க விரும்புகிறேன். சாட்சி (Testimony), சாட்சி கூறுபவர் (Witness)! ஆகையால் தான் நான் இரண்டு வெவ்வேறு வேதபாகங்களை வாசித்தேன் - ஒன்று சாட்சியைக் குறித்து, மற்றது சாட்சி கூறுபவரைக் குறித்து.
68. இப்பொழுது, சாட்சி. முன்பாக... ஒரு மனிதன் சாட்சி கூறுவதற்கு முன்பு, அவன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் நீதிமன்றத்துக்கு சாட்சி கூற அழைக்கப் பட்டால், நீங்கள் சாட்சி கூறுவதற்கு முன்பு அதைக் குறித்து ஏதாவதொன்றை அறிந்திருக்க வேண்டும்.
69. சாட்சி கூறுபவன் ஏதாவதொன்றைக் கண்டு அது உண்மையென்று அறிந்திருப்பவன். அப்படிப்பட்டவர் சாட்சி கூற அழைக்கப்படுகின்றனர். சாட்சி கூறுபவன், தான் என்ன கூறுகிறான் என்பதை அறிந்திருக்க வேண்டும். யாரோ ஒருவர் என்னிடம் இதை கூறினார்" என்று அவன் கூற முடியாது. அவனே அதைக் கண்டு அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதைக் கண்டவர் சாட்சியாயிருப்பதற்கு பதிலாக அவன் இருக்கிறான்.
70. இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில், ஜீவன் நுட்பமானதும், மரணம் என்பது மிகவும் நிச்சய மானது என்றும் நமது சபையோரிடத்திலே நாம் கண்டதால், நாம் பேசுவது உண்மை என்று முழு நிச்சயமாக அறிந்து கொள்ளும் நிலையை நாம் அடைய வேண்டியது அவசியம். பாருங்கள்? இதை நாம், வழக்கமாக நாம் கூறுவது போல், யதேச்சையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. அது சரி யென்று நாம் முழு நிச்சயமுடையவர்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் நமக்கு வரப்போகும் முடிவு எப்படிப் பட்டதென்று நமக்குத் தெரியாது.
71. விசுவாசிக்கு பாதுகாப்புண்டு என்னும் கால்வீனிய கருத்தை நான் கொண்டிருக்கும் ஒரு காரணம், ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ புத்தி சுவாதீனத்துடன் இருக்கும் போது, அதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளத் தக்க தருணம் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்பொழுது எல்லாவற்றையும் ஒரேயடியாக தீர்மானித்து விட வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வரும் போது. நாம் எங்கே, எப்படி வியாதியாயிருப்போம் என்று நமக்குத் தெரியாது. ஒருக்கால் அதிக ஜுரத்தினால் முளை பாதிக்கப்பட்டு, வாழ்க்கைப் பாதையின் முடிவில் மூளை கோளாறினால் பிதற்ற வழியுண்டு. நமக்குத் தெரியாது. ஆனால், பாருங்கள், நாம் ஏற்கனவே கிறிஸ்துவில் நங்கூரமிடப்பட்டிருந்தால், நமது மரணத்தருவாயில் நமக்கு எப்படிப்பட்ட வியாதி வந்தாலும், நாம் என்ன நிலையிலிருந்தாலும், அது ஏற்கனவே முடிவுபெற்ற செயலாக இருக்கும்.
72. நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்தரிக்கப் பட்டிருக்கிறோம். "நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும்", உங்கள் மரணம் வரைக்கும் அல்ல, "முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" என்று எபேசியர் 4 : 30 உரைக்கிறது. பாருங்கள், மரணத்துக்குப் பிறகும் நீங்கள் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
73. இப்பொழுது, சாட்சி கூறுதல். ஜனங்களின் மனதில் அநேக காரியங்களும் அநேக கேள்விகளும் இருந்து வந்துள்ளன. என் மனதிலும் கூட.
74. சில வாரங்களுக்கு முன்பு, என் தாயார் உயிரோடிருந்த நேரத்தில், நான் படுக்கையின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன், என் இளைய சகோதரி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். தாயார் கண்களை ஏறெடுத்து, "என் முதல் மகனும், என் கடைசி மகளும்" என்றார்கள். நான் தான் மூத்தவன், டிலோராஸ் கடைசி பெண். இடையே ஒன்பது மகன்கள்... இல்லை, மொத்தம் ஒன்பது பையன்களும் ஒரு பெண்ணும். தாயார், பில்லி, நீ என்னை போஷித்து வந்தாய்" என்று சொல்லத் தொடங் கினார்கள். நான் ஊழியத்தில் இருந்த காரணத்தால், என்னால் அவர்களை நன்றாக கவனிக்க முடிந்தது என்று எண்ணுகிறேன். அவர்கள், "நீ என்னை நன்றாக கவனித்தாய். டிலோராஸ், நீ என்னை நேசித்து, வீட்டு வேலையிலும், துணிகள் துவைப்பதிலும் எனக்கு உதவி செய்தாய்" என்றார்கள். அவர்கள் தொடர்ந்து, பில், நீ என்னை கிறிஸ்துவினிடம் வழிநடத்தி, ஆவிக்குரிய பிரகாரமாய் என்னை கவனித்து வந்தாய். நான் தவறு செய்த போது, நான் தவறு செய்து விட்டேன் என்றும் அதை சரி செய்ய வேண்டுமென்றும் நீ எடுத்துக்கூற தயங்கினதில்லை" என்றார்கள்.
75. நான், அம்மா , நாங்கள்...' சில மகன்கள் குடி பழக்கம் கொண்டிருந்தனர். "உங்கள் மனதை நாங்கள் நோகச் செய்தோம்" என்றேன்.
76. ஆனால் தாயின் அன்பைப் பாருங்கள். அவர்கள். "பில்லி, இதெல்லாம் சேர்ந்து தான் ஒரு பெரிய சக்கரம் உண்டாக்கப்படுகிறது" என்றார்கள்.
77. நான், "அம்மா" என்றேன். அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள் - அதாவது 409 மேப்பில் தெருவிலுள்ள வீட்டுக்கு - என்று அறிந்திருந்தார்கள். அவர்கள் அங்கு திரும்பப் போவதில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நான், 'அம்மா, நான் சிறுவனாயிருந்த போது, தேவன் உண்டென்று அறிந்து கொண்டேன். ஏனெனில் அவரை நான் வெவ்வேறு உருவங்களில் கண்டேன். முதலாவதாக நான் .... நம்முடைய குடும்பம் ஊடிகா பைக்கிலிருந்த திரு. வாத்தனின் வீட்டின் அருகில் வசித்தது. நாம் சபையைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. அவர்கள் கத்தோலிக்கர்கள்" என்றேன்.
78. நான், "நான் ஆராயத் தொடங்கினேன். கத்தோலிக்க சபையானது, 'தேவன் தமது மகத்தான அதிகாரத்தை தமது விசுவாசக் கூட்டத்தாராகிய சபைக்குக் கொடுத்து, "நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அது தான் சரி" என்று கூறினதாக உரிமை கோருகிறது. அப்படியானால் .... அதை நான் ஆராய்ந்து பார்த்தேன் விசுவாசிகள் கொண்ட வெவ் வேறு ஸ்தாபனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய தொளாயிரம் என்பதை அறிந்து கொண்டேன். தேவன் தமது அதி காரத்தை தமது சபைக்கு கொடுத்து, 'நீங்கள் இந்த வார்த்தையை புறக்கணித்து விடுங்கள், அது உங்களுக்கு அவசியமல்ல, அது வெறும் வரலாறு. உங்களுக்கு விருப்பமான எதையும் செய்யுங்கள். நீங்கள் சொல்வதே சரி , வேதம் உரைப்பது அல்ல, சபை என்ன கூறினாலும் அதுவே சரி' என்று கூறியிருந்தால், அம்மா, எந்த விசுவாசத்தையும் என்னால் ஆதாரப்படுத்த முடியவில்லை. ஏனெனில் கத்தோ லிக்க சபை ஒன்றைக் கூறுகிறது. லூத்தரன் சபை இதுவே வழி' என்கிறது. மெதோடிஸ்டு சபை, 'இருவரும் தவறு. இதுதான் வழி' என்கிறது. பாப்டிஸ்டு சபை, அது வேறொரு வழி' என்கிறது. தொளாயிரம் வெவ்வேறு கருத்துக்கள். என் விசுவாசத்தை அவைகளின் மேல் ஆதாரப்படுத்த முடிய வில்லை..
79. ஆனால், அம்மா, நான் என்ன செய்தேன் என்றால், நான் திரும்பிச் சென்று வேதாகமத்தைப் படித்தேன். அப்போஸ்தலர்கள் என்ன போதித்தனரோ, அதை நான் அப்படியே போதித்தேன். அதிலிருந்து நான் ஒரு அணுவளவும் பிசகவில்லை. அவர்கள் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்' என்று கூறின இடத்தில் நானும் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்' என்று கூறினேன். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம்' என்று கூறின இடத்தில், நானும் 'பரிசுத்த ஆவியின் அபிஷேகம்' என்று கூறினேன். அவர்கள் போதித்த விதமாகவே நானும் போதித்தேன். அம்மா, அவர்கள் பெற்ற பலன்களையே நானும்  பெற்றேன். அவர்கள் போதித்ததன் விளைவாக தோன்றிய அதே தேவன் இப்பொழுது நமது மத்தியில் வந்து அன்று செய்த அதே கிரியைகளை இன்று செய்வதை நான் காண்கிறேன். இன்று அவைகளை அவர் நமக்குச் செய்கிறார். எனவே அவருடைய வாக்குத்தத்தம் என்னவெனில், என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணு கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்' என்பதே" (யோவான் 6:54) என்றேன்.வார்த்தை தேவனுடைய சாட்சியாக விளங்குகிறது.
80. இன்று காலை நாம் அழைக்கக்கூடிய மற்ற சாட்சிகள் உள்ளன. அவைகளில் ஒன்று, நாம் மரத்தைக் குறித்து சிந்திப்போம். இது இந்த ஆண்டின் இலையுதிர் காலம். ஆனால் வசந்த காலம் வரப் போகிறது. நாம் இலையை எடுத்துக் கொள்வோம், அது ஜீவனைப் போன்றது. நாம் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால், ஜீவ விருட்சத்தின் இலை யாக இருப்போம்.
81. நாம் காடுகளில் காணும் இந்த மரம்; இலையின் காலம் முடியும் போது, ஜீவன் இலையிலிருந்து தன்னை இழுத்துக் கொண்டு, இலையை விட்டுப் புறப்பட்டுச் செல் கிறது. இலையை விட்டு ஜீவன் புறப்பட்டுச் செல்லும் போது, அது உதிர்ந்து விடுகிறது. அதைக் குறித்து நாம் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். நமது ஜன்னல்களின் வழியாக இப்பொழுது பார்த்தால் நமக்குத் தெரியும். ஜீவன் இலையை விட்டுப் புறப்பட்டவுடனே, இலை உதிர்ந்து விடுகிறது.அது தான் நாம் அடக்கம் செய்யும் சரீரம்.
82. இலையிலிருந்த அந்த ஜீவன், அது புறப்பட்டு வந்த இடத்துக்கு திரும்புகிறது. அது மரத்தின் வழியாக வேர்களை அடைகிறது. வேறொரு காலம் வரும் வரைக்கும் அது வேர் களில் தங்கியுள்ளது. இந்த காலத்தில், சூரியன் தள்ளிப் போய் - இல்லை, பூமியானது தன் சுழற்பாதையில் சுற்றும் போது, சூரியனிலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய், பூமியில் குளிர் காலம் தொடங்குகிறது. எனவே பூமியானது சுழன்று முன்னிருந்த இடத்தை அடையும் வரைக்கும். இலையிலிருந்த ஜீவனை வேர் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த இலை மறுபடியும் தோன்றுவதை தடை செய்ய ஒரு வழியும் இல்லை. சூரியன் திரும்ப வந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக இலை மறுபடியும் தோன்றும். அது மறுபடியும் தோன்றும். ஆனால் அது மறுபடியும் தோன்றுவதற்கு முன்பு. மற்றொரு காலத்திற்காக காத்திருக்க வேண்டும்.
83. இன்றைக்கு அது, தேவனுடைய சிருஷ்டிப்பின் சாட்சியாக, நமக்கு ஒரு பெரிய சாட்சியை அளிக்கிறது. ஏனெனில் நாம், சாக வேண்டிய (mortal) மானிட வாழ்க்கை யின் காலத்தில் வாழ்ந்து, விவாகம் செய்து, குடும்பங்களைத் தோன்றச் செய்து, நமது பிள்ளைகளை வளர்க்கிறோம். இது அழிந்து போகும் மானிட வாழ்க்கையின் காலம். ஆனால் நாம் உயர்விலிருந்து பிறந்தவர்களாயிருந்தால், சரீரமானது அது புறப்பட்டு வந்த மண்ணுக்கு திரும்புகிறது ... ஆவியும் அது புறப்பட்டு வந்த இடத்துக்கு கீழே செல்கிறது - இல்லை, அது புறப்பட்டு வந்த இடத்துக்கு மேலே செல்கிறது. அது தன்னைத் தந்த தேவனிடத்திற்கு திரும்புகிறது. வேறொரு காலம் வரும். வரப்போகும் அந்த காலம் சாகாமலிருக்கும் (immortal) காலம். தேவனுடைய குமாரன் தம் செட்டைகளில் ஆரோக்கியம் கொண்டவராய் உதிக்கும்போது, அந்த சரீரங்களை இனி பூமியில் பிடித்து வைப்பது இயலாத காரியம். அவர்கள் தேவனுடைய குமாரனின் பிரகாசத்தில் எழும்பி வருவார்கள். இயற்கையே அதற்கு சாட்சியாயுள்ளது.
84. எனவே நாம் கிறிஸ்தவர்களாக, ஆவியில் பிறந்தவர்களாக இருந்தால், மரணம் நம்மை பிடித்து வைக்க முடியாது, நமக்கு வெற்றியே கிடைக்கும். ஏனெனில் சாத்தான் இன்னமும் அதிகாரம் பெற்றுள்ள இந்த அழிவுள்ள சரீரம் பூமியின் மண்ணில் விழுந்து போகும். ஆனால் அந்த காலம் வரும்போது! இது தவறான காலம். இது சாக வேண்டிய காலம். ஆனால் சாகாத காலம் ஒன்று வரப்போகிறது. அப்பொழுது சதாகாலமும் உயிரோடிருப்பவர். பூமியிலிருந்து அவரிடம் திரும்பின சாகக்கூடாத ஆவிகளைக் கொண்டு வருவார். அவர்கள் உயிரோடெழுந்து, ஆயிரம் வருட அரசாட்சியில் அவருடைய மகிமையில் பிரகாசிப்பார்கள்.பூமியிலுள்ள ஒவ்வென்றுமே சாட்சி பகருகின்றது.
85. வாழ்க்கையின் தொடக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சூரியன் கிழக்கில் உதிக்கிறது. அது புறப்பட்டு சென்று மாலை யில் மறைகிறது. காலையில், பறவைகள் எழுந்து பாடுகின்றன. அவை மகிழ்ச்சியாயுள்ளன. நாமும் காலையில் புத்துணர்ச்சி பெற்றுள்ளோம். ஆனால் மாலையில், சூரியன் மறையும் வேளையில், நமக்கு களைப்பு உண்டாகிறது. ஜீவனும் மரணமும் உண் டென்று அது சாட்சி பகருகின்றது. ஒரு நாள் பிறக்கிறது. ஒரு நாள் மறைகிறது.
86. ஒரு மரம் உயிரோடிருக்கிறது. அதிலிருந்து இலைகள் உதிர்ந்து விழுகின்றன. ஜீவன் தோன்றின அந்த மரத்தின் வேர்களில் தேவன் அதை அக்காலத்தில் பாதுகாக்கிறார். அந்த வேர்களிலிருந்து தான் ஜீவன் புறப் பட்டுச் சென்று, நிழலைத் தரும் இலைகளைத் தோன்றச் செய்து. அது புறப்பட்டு வந்த அதே இடத்திற்கு மறுபடியும் திரும்பி அங்கு இளைப்பாறி, வேறொரு காலத்தில் மேலே செல்கிறது.
87. சிறு மலரில் உள்ள ஜீவன் விதையைக் கிழே விழச் செய்கிறது. அது நமக்குத் தெரியாத ஓரிடத்துக்குச் செல் கிறது. அந்த விதையிலிருந்து பழச்சதை போய்விட்டு, அந்த விதை நிலத்தில் அழுகிப் போகின்றது. இருப்பினும் அதற்குள் ஜீவன் உள்ளது. அது மறுபடியும் உயிரோடெழ அந்த ஜீவன் அதில் மறைந்துள்ளது.எல்லாமே சாட்சி பகருகின்றன.
88. உலகம் முழுவதும் அதிகமாக பிரயாணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் வெவ்வேறு மார்க்கங்கள் கூறுவதைக் கேட்டு அவைகளின் கருத்துக்களை அறிந்திருக்கிறேன். நான் முகம்மதியர். புத்த மதத்தினர், ஷீயர்கள், ஜைனர்கள், தேவர்கள், தேவதைகள்; ஓ இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான மதஸ்தரின் வெவ்வேறு கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை ஒன்றிலும் சிறிதளவும் உண்மை கிடையாது.
89. கிறிஸ்தவ மார்க்கமே சரியான மார்க்கம் - மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல். இயற்கை அனைத்தும், வானங் களும் கூட, பூமியும் அதற்கு சாட்சியாயுள்ளன. மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் உண்டு என்பதற்கு தேவன் தமது மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அளிக்கும் சாட்சியாக இவை அமைந்துள்ளன. ஒவ்வொரு காலமும் நம்மைக் கடந்து செல்கிறது. நாம் மரணம், அடக்கம். உயிர்த்தெழுதல் இவை களைக் காண்கிறோம். எனவே இது சத்தியமென்று நாம் அறிந்திருக்கிறோம். அடிப்படையாக, கிறிஸ்துவ மார்க்கமே சத்தியமுள்ள மார்க்கம். அது தன் சாட்சியை அறிவிக்கிறது.
90. ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்கென, அது மகத்தான , உன்னத ஞானத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது. அது ஒரு நோக்கத்துக்காக இங்குள்ளது. தேவன் மரங்களை அவ்வாறு உண்டாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. மரங்கள் ஒன்றுக்கொன்று வேறு பட்டிருந்த போதிலும், அவைகளை அவ்வாறே உண்டாக்கினார். இவையனைத்தையும் அவர் ஒரு நோக்கத்துக்காகவே உண்டாக்கினார்; அதாவது அவை சாட்சிகளாயிருந்து சாட்சி பகர வேண்டும் என்பதற்காக. வேண்டுமானால் அவர் மரங்களை வேறு விதமாக உண்டாக்கியிருக்கலாம் - பாறைகளைப் போல் அவர் மரங்களை வேறெந்த விதத்திலாவது உண்டாக்கியிருக்கலாம். அவர் மலர்களை வேறெந்த விதத்திலாவது உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அவை சாட்சி பகர வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு உண்டாக்கியுள்ளார். மற்ற மார்க்கங்கள் அனைத்தும் தவறு. இயேசு கிறிஸ்துவே சரியென்பதற்கு இவை உண்மையுள்ள சாட்சியாய் அமைந்துள்ளன. மரணம், அடக்கம், உயிர்த் தெழுதல் என்பவை , நாம் நித்திய காலமாக மரித்திராமல், மறுபடியும் ஜீவிப்போம் என்று சாட்சி பகருகின்றன. அது ஒரு உன்னத ஞானத்தைக் காட்டுகிறது !
91. நமக்கு நேரம் இருக்குமானால், நாம்.... நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் நாம் இதைக் குறித்து பேசலாம்.... நம்மை மற்றவர்களுக்கு மாதிரி படுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த கூடாரத்தில் நமது சொந்த போதகங்களையும் உபதேசங் களையும் நாம் பெற்றுள்ளோம். எனக்கு சரியென்று தோன்று வதை இந்த இடத்தில் போதிக்க எனக்கு உரிமையுண்டு.
92. நமக்கு பிரசன்னமாகியுள்ள தேவ கிருபையைக் குறித்து பேசும்போது, வேறொரு ஞானத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நீங்கள் கவனித்தீர்களா . முதலாவது வேர், இரண்டாவது தண்டு, மூன்றாவது கனி, அதனுடன் முடிவடைகிறது.
93. நீதிமானாக்கப்படுதல், வேர் ; பரிசுத்தமாக்கப்படுதல், தண்டு ; கனி, மூல வித்து. அது மார்டின் லூத்தர், ஜான் வெஸ்லி, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் - நீதிமானாக் கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அது நாம் வேதத்தில் கொண்டுள்ள கருத்துக்க களுக்கு சாட்சி பகருகின்றது. சாட்சி பகரும் ஒரு டஜன் வெவ்வேறு காரியங்களை இங்கு நான் எழுதி வைத்திருக் கிறேன். அவைகளைக் குறித்து என்னால் கூற முடியும். இயற்கை கரியங்களை நாம் பார்க்கும் போது, அவை ஆவிக்குரிய காரியங்களுக்கு சாட்சியாயுள்ளன. நீதிமானாக்கப்படுதல், வேர்கள்; பரிசுத்தமாக்கப்படுதல், தண்டு; பரிசுத்த ஆவியின் அபிஷேகம், வேர், தண்டு இவைகளின் வழியாக தோன்றும் கனி.
94. வேர் விதையிலிருந்து தோன்றினது. விதை பூமிக்கடியில் சென்று, மறுபடியும் தோன்றுகிறது.
95. இன்றைக்கு ! மானிடராகிய நாம் லூத்தரின் காலத்தில் வாழ்ந்தோம், வெஸ்லியின் காலத்தில் வாழ்ந்தோம். இப்பொழுது நாம் மீட்கப்பட்ட காலமாகிய பெந்தெகொஸ்தே காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது என்ன? பெந்தெகொஸ்தே நாளில் நடப்பட்ட அதே சபையை மறுபடியும் கொண்டு வருதல். இயற்கையே அதற்கு சாட்சி பகருகிறது அது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகிய வைகளுக்கு சாட்சி பகருவது போல்.
96. ஓ , நித்திய தேவனும் அவருடைய சாட்சிகளும் ! நீங்கள் சுற்றிலும் பார்ப்பீர்களானால், தேவன் கவனத்தோடு ஒவ்வொரு நாளும் சாட்சி கொடுப்பதை நீங்கள் எல்லாவிடங்களிலும் காண்பீர்கள். அப்படியிருக்க, இந்த எளிமையை நாம் எவ்வாறு வேண்டுமென்று, அல்லது அறியாமையினால் காணாதிருக்க முடியும்? ஏன், ஒவ்வொரு மரமும் நமக்கு போதிக்கிறது. ஒவ்வொரு தோட்டமும் நமக்கு போதிக்கிறது. முழு உலகமே நமக்கு போதிக்கிறது. தேவன் -தேவனாயிருக்கிறார். அவருடைய மகிமையை நாம் காண் கிறோம். இருப்பினும் நாம் வேண்டுமென்று அதை கடந்து சென்று, பாராமுகமாக இருந்து, அதற்கு பதிலாக நமது சிந்தனைகளை உலகத்திலுள்ள வீணான காரியங்களின் மேல் செலுத்தி, நம்மை ஆட்கொண்டுள்ள ஆவியின் மூலம் கிடைக்கப்பெறும் இச்சைகளைக் கொண்டு திருப்தியடை கிறோம். இந்த ஆவியை நாம் உதறித் தள்ளி, தேவனுடைய ஆவியைப் பெற வேண்டியவர்களாயிருக்கிறோம்.
97. இயற்கை அனைத்தும், எல்லாவிடங்களிலுமுள்ள அனைத்துமே சாட்சி பகருகின்றன. வானங்கள், ஆகாயம், அநேக காரியங்கள் ! நேற்று என் படிக்கும் அறையில் உட்கார்ந்து கொண்டு இவைகளை எழுதினேன். அவை எல்லாவற்றையும் குறிப்பிட எனக்கு நேரமிருக்காது. ஆனால் தேவன் சிருஷ்டித்த எதையுமே நீங்கள் சுற்றிலும் பார்த்தால், அவை தேவனுடைய மகிமைக்கு சாட்சியாயிருக்கும். எதுவுமே தேவனுடைய சிருஷ்டி எதுவுமே, தேவனுக்கும் அவருடைய நோக்கத்துக்கும், சாட்சியாக அமைந்துள்ளது. அது மகத் தான, உன்னத ஞானத்தைக் காட்டுகிறது.
98. நான் மலையுச்சியில் நின்று கொண்டு, ஆடுகள் தின்னும் - காட்டு ஆடுகள் தின்னும் - இவ்வளவு உயரமுள்ள குட்டையான ஊசியிலை மரத்தை (pygmy spruce) கண்டிருக்கிறேன். நீங்கள் சற்று தூரம் சென்றால், விஷ மூலிகையை (hemlock) காண்கிறீர்கள்.அது வித்தியாசமான தன்மையைப் பெற்றுள்ளது. அது வேறிடத்தில் வளரும் இனம். இன்னும் சிறிது தூரம் சென்றால், நீங்கள் தேவதாரு மரத்தைக் காண்கிறீர்கள். இன்னும் சிறிது தூரத்தில் ஆடும் ஒரு வகை மரம் (quaking asp) உள்ளது. அதிலிருந்து சென்றால் நீங்கள் புதரை அடைகிறீர்கள். அங்கிருந்து சென்றால் புல், புல்லிலிருந்து சென்றால் களை (weeds). அங்கிருந்து வனாந்தரத்துக்கு செல்லும்போது, அங்கு ஒன்றுமேயில்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய உயிரணுவையும் (cel) ஜீவனையும் பெற்றதாய், அது வளரும் சூழ்நிலை என்னவென்பதற்கு அறிகுறியாய் உள்ளது. ஞானமுள்ள தேவன் மாத்திரமே இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய முடியும். ஒவ்வொன் றிற்கும் தனிப்பட்ட ஜீவன் உள்ளது. நீங்கள் பனை மரத்தை பிளாரிடாவிலும், கர்வாலி மரத்தை மத்திய அமெரிக்கா விலும், ஆடும் ஒரு வகை மரத்தை ராக்கிஸ் மலைகளிலும் காணலாம். ஒவ்வொன்றும் பிரத்தியேக ஜீவனைக் கொண்ட தாய், சர்வவல்லமையுள்ள தேவனின் மகிமைக்கு சாட்சி யாயுள்ளது.
99. நீங்கள் மகத்தான கடலுக்கு அருகில் நிற்கும்போது, அதைக் கவனியுங்கள். அதன் கோபமுள்ள பேரலைகள் கோபத் தோடு கரையில் மோதுகின்றது. சங்கிலியால் கட்டப்பட்ட கோபமுள்ள நாயைப் போல் அது குதிக்கின்றது. கூடுமானால் அது இந்த உலகத்தின் பாவத்தைக் கண்டு சலிப்படைந்து அதை முழ்கடித்து விடும். ஆனால் தேவன் வானத்தில் சந்திரன் என்னப்படும் ஒரு காவல்காரனை வைத்துள்ளார். அவர் கடலின் எல்லைகளை நிர்ணயித்து, அதை ஒருபோதும் கடந்து செல்லக்கூடாதென்று கட்டளையிட்டிருகிறார். அந்த காவல்காரன் இரவும் பகலும் அதை காவல் காக்கிறான். தேவன் காண எப்படியிருக்கிறார் என்று நோக்குவதற்கென அவன் முதுகைத் திருப்பும்போது, கடலேற்றம் (tide) மெள்ள உள்ளே நுழைந்து விடுகிறது. அவன் முகத்தை மறுபடியும் திருப்பும் போது, கடலேற்றம் அங்கிருந்து போய் விடுகிறது. கடல் எல்லையைத் தாண்டி விடாதபடி அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான். அவன் முதுகைத் திருப்பும்போது, கடலேற்றம் மெள்ள நுழைந்து விடுகிறது. ஆனால் அவன் முகத்தை மறுபடியும் திருப்பும் போது, கடலேற்றம் பின்னால் ஓடி விடுகிறது. தேவன் ஒரு காவல்காரனை வைத்திருக்கிறார். அது என்ன செய்கிறது? ஆதியாகமத்தின் தேவன், வேதாகமத்தின் தேவன் இன்னும் தேவனாக இருக்கிறார் என்று அது சாட்சி பகருகிறது. அவர் இருக்கிறார் என்பதற்கு அது சாட்சியாயுள்ளது.
100. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் எவ்வாறு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சாட்சி கூறினர் என்பது போன்ற இன்னும் சிலவற்றை நாம் நினைவுக்கு கொண்டு வருவோம். உதாரணமாக ஏசாயா 9ம் அதிகாரம் 6ம் வசனம். ஏசாயா 9:6. அது நடப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் சாட்சி பகர்ந்தனர். அவர்கள், "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" என்றனர். அவர்களுக்கு அது எப்படி தெரியும்? ஸ்திரீயி னிடத்தில் - பிறந்த ஒரு மனிதன் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? அது நடப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே, எப்படி ஒரு மனிதன், "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" என்று இனி நடக்கப்போவதை பிழையின்றி கூற முடியும்? அவன், அவர் நாமம் ஆலோசனை கர்த்தா, சமாதானப் பிரபு , வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்' என்றான்.
101. அவர் எங்கே பிறப்பாரென்று தீர்க்கதரிசி அறிவித் தான். தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், "யூதேயாவிலுள்ள பெத்லகேமே, நீ ஆயிரங்களுக்குள்ளே சிறியவள் அல்லவா? ஆயினும் ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்படுவார்' என்றான் (மீகா. 5:2).
102. இந்த தீர்க்கதரிசிகளை அசைத்தது எது? அவர்களை ஊக்குவித்தது எது? பிழையற்ற பரிபூரண தீர்க்கதரிசனம்! அது மாத்திரமல்ல, அவர் என்ன செய்வாரென்றும் தீர்க்க தரிசிகள் உரைத்தனர். அவருடைய பிறப்பை தீர்க்கதரிசிகள் கண்டனர் - அவர் எங்கே பிறப்பாரென்றும், எப்படி பிறப்பாரென்றும். அவர் ஏதோ ஒரு ஸ்திரீக்குப் பிறந்த சாதாரண குழந்தையல்ல. அவர் அற்புத விதமாக பிறப்பார் என்று அது கூறுகிறது - அவர் கன்னிகையின் வயிற்றில் பிறப்பார் என்று. ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். அது நடப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சாகக்கூடிய மனிதன் அதைக் காணத்தக்கதாக அவனுக்கு நேர்ந்தது என்ன? அது மிகவும் பிழையற்றதாய் சிறிதளவும் பிசகாமல் நிறைவேறினது. உன்னதராகிய ஜீவனுள்ள தேவனின் சாட் சியைப் பாருங்கள் ! அது மாத்திரமல்ல, அவர் எங்கே பிறப்பாரென்றும், எப்படி பிறப்பாரென்றும் முன்னுரைக்கப் பட்டது.
103. அவரைக் குறித்து உலகம் என்ன சொல்லு மென்றும், அவரை மேசியாவென்று நிரூபிக்க அவரைத் தொடரவிருக்கும் அடையாளங்கள் என்னவென்றும் முன்னு ரைக்கப்பட்டது. அவர் புறக்கணிக்கப்படுவார் என்று உரைக் கப்பட்டது. அவர் சிலுவையில் அறையப்பட்ட போது மொழிந்த வார்த்தைகள், அவர் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆவியில் உரைக்கப்பட்டது.
104. ஆவியில் தாவீது! இதை குறிப்பிட எனக்கு விருப்பம். தாவீது பரிசுத்த ஆவியினால் அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? (மத். 22 : 43) என்று இயேசு கேட்டார். தாவீது அல்ல, ஆவியில் தாவீது! தாவீதுக்கும் ஆவியில் தாவீதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சபைக்கும் ஆவியில் சபைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. "தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? என்னுடைய வலது பாரிசத்திலே உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே, அப்படியிருக்க அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி? அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அதன் பிறகு ஒருவனும் அவரிடத்தில் கேள்விக் கேட்கத் துணியவில்லை.
105. தாவீது ஆவியில் நிறைந்து 22ம் சங்கீதத்தை பாடினான். அவன் ஆவியில் நிறைந்தபோது, என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளை யெல்லாம் அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்று இயேசு சிலுவையிலறையப்பட்டபோது மொழிந்த அதே வார்த்தைகளை உரைத்தான்.
106. மற்ற தீர்க்க தரிசி இங்கு வருகிறான். அவன், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார் ; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது ; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்" என்கிறான் (ஏசா. 53:5).
107. இந்த தீர்க்கதரிசிகள் உரைத்த தீர்க்கதரி சனங்களின் பிழையற்ற தன்மை. அவரைக் குறித்து அவர்கள் உரைத்த ஒரு வார்த்தையும் கூட நிறைவேறாமல் போகவில்லை. அவரைக் குறித்து உரைக்கப்பட்ட கடைசி ஏழு தீர்க்கதரி சனங்கள், அவர் சிலுவையில் தொங்கின அந்த கடைசி ஏழு மணி நேரத்தில் நிறைவேறின. ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறினது. ஒன்றும் நிறைவேறாமல் போகவில்லை...
108. அது எதைக் காண்பிக்கிறது? ஒரு உன்னத ஞானம் உள்ளதென்று. அது அந்த மனிதர்கள் அல்ல. அவர்கள் உங்களையும் என்னையும் போல் சாதாரண மனிதர்களே. அவர்கள் உன்னதர் ஒருவரால் ஊக்குவிக்கப்பட்டு, இந்த சந்ததியிலுள்ள நாமும், இனி வரப்போகும் சந்ததியாரும், நமக்கும் அந்த சந்ததிக்கும் இடையேயுள்ள மற்ற சந்ததி யாரும் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்த்து அது சத்தியமென்று அறிந்து கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் சாட்சிகளாக விளங்குகின்றனர். தேவனுடைய வார்த்தை சத்தியம் என்பதற்கு இது சாட்சியாக உள்ளது.
109. அவருடைய கிரியைகள் அனைத்தும் பரிபூரண மானவை. அவை பரிபூரணமாகவும் குறித்த நேரத்தில் நிறைவேறுகிறவைகளுமாயுள்ளன. அவை ஒரு மணிநேரம் கூட தவறுவதில்லை. அவை தவறும் என்று சில நேரங்களில் நாம் நினைப்பதுண்டு, ஆனால் அவை தவறுவதில்லை. அவை நிறைவேறின பிறகு, அவை அதற்கு முன்பாக நடந்திருக்க முடியாதென்றும், இதைக் காட்டிலும் நல்லதாக நடந்திருக்க முடியாதென்றும் நாம் அறிந்து கொள்கிறோம். அது பரிபூரணமாக குறித்த நேரத்தில் நிறைவேறுகின்றது.
110. இன்றைய நமது நாளிலும் கூட, இந்த தரிசனங்கள் உண்டாவதையும், காரியங்கள் நிகழ்வதையும் நாம் காண் கிறோம். இவை முன்னுரைக்கப்படுகின்றன. அவை எப் பொழுது நிறைவேறும் என்றும், என்ன நடக்குமென்றும் நாம் வியக்கிறோம். ஆனால் அவை பரிபூரணமாக குறித்த நேரத்தில் நிறைவேறுவதை நாம் காண்கிறோம்.
111. வயோதிபமாக, கை கால்கள் நடுங்கும் நிலையில் நான் கண்ட என் தாயார் இப்பொழுதுள்ள நிலையை நான் எப்படி சிந்தித்து பார்த்திருக்க முடியும்? ஆனால் அவர் எனக்கு அந்த தரிசனத்தை அருளி, அவர்கள் தற்பொழு துள்ள நிலையை நான் கண்டபோது தேவனை மகிமைப் படுத்தினேன். அவர்கள் மறுபடியும் வருவார்களென்று எனக்குத் தெரியும். அவர்கள் மரிக்கவில்லை, நித்திரையடைந்திருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருக் கிறார்கள்.
112. தேவன் இவைகளை முன்னுரைப்பதை நாம் எவ்வளவாக காண்கிறோம்! சென்ற முறை நான் உங்கள் பிரசங்க பீடத்தில் - இங்குள்ள பிரசங்க பீடத்தில் - நின்றபோது, நான் வடக்கு பாகத்துக்கு செல்வதைக் குறித்தும், என்ன நடக்கு மென்றும் தேவன் எனக்கு அருளின தரிசனத்தைக் குறித்து கூறினேன். மலையிலிருந்து இறங்கி வந்த அந்த ஆசாமிகள், "சகோ. பிரான்ஹாமே, இதற்கும் அரை மைல் தொலை விலுள்ள இடத்திற்கும் இடையே வெள்ளி நிற முனை கொண்ட சாம்பல் நிறக் கரடி ஒன்று இருக்குமென்றா கூறுகிறீர்கள்? நாங்கள் அதை இதற்கு முன்பு இங்கு கண்டதில்லையே! அங்கு செல்வதற்கு முன்பு அது உங்களுக்கு கிடைக்கும் என்றா கூறுகிறீர்கள்?” என்றனர். நான், அது அவருடைய வார்த்தை " என்றேன்.
113. அதே விதமாக அது நடந்தது. ஏன்? அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத் தங்கள் அனைத்தும் சத்தியமாயுள்ளன என்று அது சாட்சி பகருகின்றது. தேவன் சாட்சி சொல்லுகிறார், அவருடைய சாட்சிகள் உண்மையானவை. அவர் உரைக்கும் சாட்சி, ஒரு ஞானம் உண்டென்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. ஆம்.
114. நசரேயனாகிய இயேசு பூமிக்கு வந்த போது, அவர் செய்த மகத்தான கிரியைகள் அனைத்தும், அவர் உரிமை கோரினவைகளுக்கு சாட்சியாக விளங்கின. அவரை யாருமே சந்தேகித்திருக்கக் கூடாது. அவர், “நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்” என்றார் (யோவான் 10 : 38) - அவரை அவர்கள் தேவனாகக் காண முடியாமல் போனால்.
115. "நீ உன்னை பெரியவனாக்கிக் கொள்கிறாய்! நீ மனிதனாயிருக்க உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய் ." .
116. அவர், "நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தால் என் கிரியைகளை விசுவாசியுங்கள். அவை தேவனுடைய சாட்சிகளாய், நான் யாரென்று என்னைக் குறித்து உரைத்ததற்கு சாட்சியாய் உள்ளன. நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தால், என்னைத் தொடரும் அடையாளங்களை விசுவாசியுங்கள். இவைகளை மேசியா செய்ய வேண்டுமென்று கருதப்படுகின்றது அல்லவா?" என்றார். அவர் யார்? சாட்சி! அவர் உரிமை கோரின ஒவ்வொன்றுக்கும் அவை சாட்சி பகர்ந்தன.
117. மார்த்தாள் அங்கு இயேசுவின் பக்கத்தில் நின்றாள். அவளுடைய சகோதரன் மரித்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தான். அவனுடைய சரீரம் அழியத் தொடங் கினது. அவன் கல்லறையில் அழிந்து கொண்டிருந்தான். அவனுடைய சரீரத்தில் புழுக்கள் - சருமப் புழுக்கள் - நெளியத் தொடங்கின. அவனுடைய முகம் அரிக்கப்பட்டது. அவள், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அதைக் குறித்து நாங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம்” என்றாள்.
118. அவர், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக் கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் ; இதை விசுவாசிக் கிறாயா?" என்றார்.
119. அதற்கு அவள், "ஆம். ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள்.
120. "நான் யாரென்று ; நான் யாரென்று அறிவித்ததை இப்பொழுது உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். அதற்கு நான் சாட்சி பகரப் போகின்றேன். நான் என்ன உரிமை கோரினேனோ , நான் அதுவாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்கப் போகின்றேன். அவனை எங்கே வைத்தீர்கள்" என்றார்.
அவள், ஆண்டவரே, வந்து பாரும்" என்றாள்.
121. அப்பொழுது அவர் தம்முடைய மானிடத் தன் மையை வெளிப்படுத்தினார். அவர் அழுகிறவர்களோடு அழுகிறார். அவர் சிரிக்கிறவர்களோடு சிரிக்கிறார். அவர் ஜெயங்கொள்ளுகிறவர்களோடு ஜெயங்கொள்கிறார். அவரை ஜெயங்கொள்ளுகிறவராக வைத்திருப்போம்.
122. அவர் கல்லறைக்குப் போய் அங்கே நின்றார். அவர்கள் கல்லைப் புரட்டினார்கள். அங்கு அந்த சிறு சரீரம் புழுக்கள் நிறைந்ததாய், அரிக்கப்பட்டு பூமியில் கிடத்தப் பட்டிருந்தது. அவனுடைய முகம் அரிக்கப்பட்டு குழி விழுந்திருந்தது. அவர், லாசருவே, வெளியே வா" என்னும் வார்த்தைகளை உரைத்தார். மரித்துப் போன அந்த மனிதன் உயிரோடெழுந்து காலூன்றி நின்றான்.
123. அவர் தேவகுமாரன் என்று உரிமை கோரினது அங்கு நிரூபிக்கப்பட்டது. அவர் தேவகுமாரனைக் காட்டிலும் மேலானவர். அவர் குமாரனும் தேவனுமாயிருந்தார். அவர் தேவனுடைய கூடாரமாயிருந்தார். ஏனெனில் எந்த இரண்டாம் ஆளுக்கும் அப்படிப்பட்ட வல்லமை இருக்க முடியாது. மரித்து அடக்கம் பண்ணப்பட்டு நான்கு நாட்களான ஒருவனை உயிரோடெழுப்ப தேவனால் மாத்திரமே முடியும். அவருடைய சொந்த கிரியைகளே அவர் கோரின ஒவ்வொரு உரிமைக்கும் சாட்சியாக விளங்கின. அவர் தேவனாயிருந்தார்.
124. அது உண்மையென்று நமக்குத் தெரியும். ஏனெனில் அவரே அவ்வாறு கூறினார். தீர்க்கதரிசிகளின் சாட்சி, இயற்கையின் சாட்சி. இயற்கை சாட்சியாயிருத்தல். தீர்க்கதரிசிகள் சாட்சியாயிருத்தல், இயேசுவின் சாட்சி.
125. அவர் சாட்சியில்லாமல் இருந்ததேயில்லை. தேவன் எப்பொழுதுமே தமது சாட்சிகளைக் கொண்டவராயிருந்தார். அவர் உலகத்தில் இருந்த போது, நான் போவது உங்களுக்கு நலமாயிருக்கும். நான் போகாதிருந்தால் இந்த சாட்சியை - இந்த அழிவில்லாத நித்திய சாட்சியை - நான் அனுப்ப முடியாது" என்றார்.
126. அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர். ஆகவே அவர் அழிய.... இல்லை சாகவேண்டும். தேவன் அவருடைய சரீரத்தின் அழிவைக் காணவொட்டார். ஆனால் அவர் நமது பாவங்களைப் போக்க ஒரு மனிதனைப் போல் மரிக்க வேண்டிய தாயிருந்தது.
127. ஆனால் அவர் போவதற்கு முன்பு, நமக்கு ஒரு சாட்சியை வைத்துப் போனார் - பரிசுத்த ஆவியை . ஆதிமுதற் கொண்டு காலங்கள் தோறும் இருந்த ஏறக்குறைய எல்லா தீர்க்கதரிசிகளும், கடைசி நாட்களில் சபையில் இருக்கும் இந்த மகத்தான சாட்சியைக் குறித்து உரைத்துள்ளனர் - பரிசுத்த ஆவி என்னும் நமது மகத்தான சாட்சியைக் குறித்து.
128. பரிசுத்த ஆவி நமக்கு சாட்சியாயிருக்கிறார். அவர் நிரூபணமாயிருக்கிறார். அவரே முத்திரை. அவரே நம்பக மான உரிமை . தேவன் உரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் உரிமை பத்திரமாக இருக்கிறார். ஆமென்! கிறிஸ்து பிழைத்திருக்கிறார் என்பதற்கு அவர் சாட்சியாக விளங்கு கிறார். அவர் பிழைத்திருக்கிறபடியால் நாமும் பிழைத்திருக் கிறோம். அவரே நம்பகமான வாக்குமூலம்.
129. சபையை வழிநடத்த அப்படிப்பட்ட ஒரு நபர் கடைசி நாட்களில் வரவிருந்ததால், அவர் இங்கிருப்பார் என்று தமது ஜனங்களுக்கு எடுத்துரைப்பது தேவனுடைய கடமையாயிருந்தது. ஏறக்குறைய எல்லா தீர்க்கதரிசிகளுமே. பரிசுத்த ஆவியின் வருகையைக் குறித்து சாட்சி கொடுத்தனர்.
130. அது நடப்பதற்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெத்துவேலின் குமாரனாகிய யோவேல் அவர் வருவாரென்று தீர்க்கதரிசனம் உரைத்தான். பெத்துவேலின் இந்த மகத்தான குமாரன் ஒரு தீர்க்கதரிசி. அவனுக்கு நரம்பு சம்பந்தமான கோளாறினால் மூளை பாதிக்கப்பட்டு, பைத்தியக்காரனாகி விட்டான் என்று கருதப்பட்டவன். அவன் யோவேல் 2 : 28ல் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறான் : கடைசி நாட்களிலே மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள், அக்கினி புகை ஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருமுன்னே , கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.
131. இந்த மகத்தான சாட்சி வருவதற்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே, பெத்துவேலின் குமாரன் அதைக் குறித்து சாட்சியுரைத்து தீர்க்கதரிசனம் உரைத்தான். இந்த சிறு ஆளை அசைத்தது எது?
132. ஸ்திரீயினிடத்தில் பிறந்து வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருந்த இந்த மனிதனிடம் எது இதைக் குறித்து கூறியிருக்கும் என்று எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவன் அப்படிப்பட்டவனாய் தான் இருந்தான். அவன் விண்வெளிக்கும் காலத்துக்கும் அப்பால் நோக்கி கடைசி நாட்களில் சபைக்கு வந்த இந்த மகத்தான சாட்சியைக் காணத்தக்கதாக அவனுடைய உள்ளத்தை அசைத்தது எதுவென்று எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை செய்யக் கூடியது எதுவென்று எனக்குச் சொல்லுங்கள். ஞானமுள்ள, உன்னத , மகத்தான சர்வ வல்லமையுள்ள தேவனைத் தவிர வேறு யாரும் இதை செய்ய முடியாது. அவர் ஒருவர் மாத்திரமே சாகக்கூடிய மானிடன் ஒருவனை அசைக்க முடியும். ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனு மாயிருக்கிறான். அவன் பூவைப் போலப் பூத்து அறுப்புண் கிறான். அவன் நிலைநிற்காமல் தன் ஆவியை விடுகிறான்” என்று யோபு 14ம் அதிகாரம் உரைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆளின் மீது ஆவி - சர்வ வல்லமையுள்ள தேவனின் ஞானம் - இறங்கி, காலத்தின் தடைகளையெல்லாம் உடைத் தெறிந்து, அவருடைய ஆவியின் மூலம் சாகக்கூடிய ஒரு மனிதனுக்கு என்ன நடக்குமென்பதைக் காண்பிக்கிறார். அல்லேலூயா!
133. இது ஜீவனுள்ள தேவனுடைய சாட்சியல்ல வென்றால், வேறென்ன? நடப்பதற்கு முன்பே ஒன்றை முன்னு ரைப்பதென்பது! ஆமென்! நடப்பதற்கு முன்பே ஒன்றை காண்பதென்பது! அதை ஞானத்தோடும் பிழையற்ற விதத்திலும் முன்னுரைத்து, அவன் உரைத்த விதமாக நடப்பதென்பது! அது சாட்சியல்லவென்றால், வேறென்ன? ஜீவனுள்ள தேவன் இருக்கிறார் என்பதற்கு இதைக் காட்டிலும் வேறெது உறுதியாக உரைக்க முடியும்? நிச்சயமாக, அவர் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
134. கடைசி நாட்களில் அவர் மாம்சமான யாவர் மேலும் தம் ஆவியை ஊற்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
135. யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்து எழுபது ஆண்டு களுக்கு பிறகு ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா சபைக்கு வரவிருந்த இந்த மகத்தான சாட்சியைக் குறித்து தீர்க்க தரிசனம் உரைத்தான்.
136. நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்? ஒரு சாட்சி, ஒரு உண்மையான சாட்சியைக் குறித்து. அவர் இயற்கையின் மூலமாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் வேதாகமத்தின் மூலமாகவும் சாட்சியாக அறிவிக்கப்பட்டார். நாம் வழிவழியாக, அளிக்கப்படவிருக்கும் இந்த நாளை அடைந்திருக்கிறோம்.
137. யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் அறுபத்தாறு அதிகாரங்களில் ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தின விசேஷம் வரைக்குமுள்ள முழு வேதாகமத்தையும் அளித்தான். அவனுடைய தீர்க்கதரிசன புத்தகம் அறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்டது. அவன் ஆதியாகமத்தில் காணப்படும் சிருஷ்டிப்பிலிருந்து தொடங்கி ஆயிரம் வருட அரசாட்சியில் முடிக்கிறான். இந்த மகத்தானவன் பரிசுத்த ஆவியின் வருகையை முன்னுரைத்தான்.
138. நாம் வேதாகமத்துக்கு சென்று அதைப் படிப்போம். நான் ஏசாயா 28 : 11 என்று எழுதி வைத்திருக் கிறேன். நாம் சிறிது நேரம் படித்து, பரிசுத்த ஆவியின் வருகையைக் குறித்து அவன் என்ன சொல்கிறான் என்பதைக் காண்போம். ஏசாயா 28ம் அதிகாரம், நாம் நம் வசனத்திலிருந்து தொடங்குவோம்.
அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் மகிமையான கிரீடமாகவும் .....
139. அவன் சாட்சி வரப்போகும் அந்த மகத்தான காலத்தைக் குறித்துப் பேசுகிறான். நம்முடைய கிரீடம் என்ன? பரிசுத்த ஆவி நம்மை முடி சூடுகிறார்!
...தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
140. மீதியானவர்கள், விடப்பட்டுள்ள ஜனங்கள். அவர் முடியாக; மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடி யாகவும் இருப்பார். சற்று யோசித்துப் பாருங்கள், இது நடப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது.
நியாயம் விசாரிக்க உட்காரு கிறவனுக்கு நியாயத் தின் ஆவியாகவும்.... (அதை தான் அவர் நமக்கு பீடத் தண்டை செய்கிறார்).
....யுத்தத்தை அதன் வாசல் மட்டும் திருப்புகிற வர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
141.அவருக்காகவும் அவரோடு கூடவும் நிற்பவர்களுக்கு இந்த மகத்தான பாசுத்த ஆவி (தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட பரிசுத்த ஆவி) யுத்தத்தில் வாசலில் நிற்பவனுக்கு பராக்கிரமமாக இருப்பார். அவரே நம்முடைய பராக்கிரமம். அவர் மேல் நாம் சார்ந்திருக்கிறோம் - நமது கலாச்சாரத்தின் மேல், கல்வியின் மேல், உலகத்தின் காரியங்கள் மேல் அல்ல. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடை ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' (சக. 4 : 6). சபையானது பயபக்தியோடு அதன் மேல் சார்ந்துள்ளது. வாசலில் நிற்கிற வனுக்கு அவர் பராக்கிரமமாக இருப்பார். அவனுடைய வேதசாஸ்திர அறிவு அல்ல, அவனுடைய ஸ்தாபனம் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவி அவன் பராக்கிரமமாயிருப்பார். அவன் வாசலில் நின்று கொண்டு, சத்துருக்களைத் துரத்துவதற்கு பரிசுத்த ஆவியின் பராக்கிரமத்தின் மேல் சார்ந்திருப்பான்.
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி (இப்பொழுது கவனியுங்கள்), மதுபானத்தால் வழிதப்பிப் போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி தீர்க்கதரிசனத்தில் மோசம் போய் (ஆங்கிலத்தில் "they er in vision" அதாவது, "தரிசனத்தில் தவறு செய்து" - தமிழாக்கியோன்) நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்...
142. வேறுவிதமாகக் கூறினால், தரிசனம், அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றை நம்புவதில்லை. நியாயந்தீர்க்கிறதில். அவர்கள், "நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்து கொண்டால், அது போதும்" என்கின்றனர். நாம் பெற்றுள்ளது என்ன? ஒரு கூட்டம் மது அருந்துபவரை. தீர்க்கதரிசி என்ன சொன்னான் என்பதை கவனியுங்கள். அங்கு தேவனுடைய சாட்சி இருக்கிறார்.
போஜன பீடங்களெல்லாம் (all tables) வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
143. எந்த இடமும் சுத்தமாக இல்லை; மேசைகள். ஏன், குடிகாரரும் வேசிகளும் அங்கு சென்று, ஒரு ரொட்டியை எடுத்து துண்டுகள் போட்டு, இராப்போஜனம் ஆசரிக் கின்றனர். அங்கு சுத்தமானவர்களும் அசுத்தமானவர்களும் ஒன்றாக புசிக்கின்றனர். வாந்தி! மேசைகள் வாந்தியினால் நிறைந்துள்ளன.
அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? (அப்படிப் பட்ட நாளில்?) யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்?
144. அவர்கள் தங்கள் சொந்த வேதசாஸ்திர அனுபவங்களின் மேலும் மற்றவைகளின் மேலும் சார்ந்துள்ள போது, அவர் யாருக்கு அதை போதிக்க முடியும்? அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப மாட்டார்கள். அவர்கள்,  "ஒ . அது வேறொரு இடத்துக்கு, அது வேறொரு சந்ததிக்கு" என்கின்றனர். அவர்களுடைய மேசைகளெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. தேவனுடைய உன்னத ஞானம் இந்த தீர்க்கதரிசியின் மூலம் உரைப்பதை கவனியுங்கள்:
.....பால் மறந்தவர்களுக்கும், முலை மறக்கப் பண்ணப் பட்டவர்களுக்குமே . ஸ்தாபன சபைகளிலுள்ள குழந்தைகளுக்கு அல்ல !
கற்பனையின் மேல் கற்பனையும்....
145. இவர் இப்பொழுது வார்த்தையைக் குறித்துப் பேசு கிறார். இயேசுவின் நாமம்" என்று சொல்லியிருக்கும் போது, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று சொல்லாதே. அவர் மறுபடியும் பிறக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கும் போது, கைகுலுக்கலாம்" என்று சொல்லாதே.
கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
பரியாச உதடுகளினாலும் (ஆங்கிலத்தில் "Stammering lips"அதாவது திக்கும் உதடுகளினாலும்" - தமிழாக்கியோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
146. பரியாச உதடுகளினால், "முணுமுணுத்தல்" சபை யோர் பயபக்தியோடும் அமைதியோடும் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் .... அந்த முணு முணுத்தலைக் கேட்டு அவர் என்ன சொல்லுகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்' பரிசுத்த ஆவி தீர்க்கதரிசனம் உரைத்தல். பரியாச உதடுகளினால் இந்த ஜனத்தோடே பேசுவேன்."
இதுவே இளைப்பாறுதல் ...
147. ஏழாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிக்கும் அட்வென்டிஸ்ட் சகோதரரே, இதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?
...... இதுவே ஓய்வு நாள். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல்.
148. இதனுடன் வாசலில் நின்று கொண்டு, இதை சாட்சியாயுரைக்கக் கூடிய தீரமுள்ள மனிதரை தேவன் நமக்குத் தந்தருளுவாராக.
இதுவே நீங்கள் இளைத்தவனைஇளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் (ஆங்கிலத் தில் "refreshing" - புத்துணர்ச்சி - தமிழாக்கியோன்). என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
149. அது தான் விசனமான பாகம். அவர்கள் கேட்க மறுத்தனர். அவர்கள் தலையைத் துலுக்கி, கேலி பரியாசம் செய்து விட்டு போய்விட்டனர்.
150. ஆனால் ஏசாயா, அவர் தமது ஆவியை அனுப்புவார். அது சபைக்கு மகிமையான கிரீடமாகவும், வாசலில் நிற்கிறவனுக்கு பராக்கிரமமாகவும் இருக்கும்" என்று தீர்க்க தரிசனம் உரைத்தான். அது ஆவி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது? பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசவேன். இதுவே இளைப்பாறுதலும் புத்துணர்ச்சியுமாயிருக்கும்" என்றார் அவர்.
151. ஆனால் இவையனைத்துக்கும் பதிலாக அவர்கள் தங்கள் ஸ்தாபனங்கள் வேண்டும் என்றனர். அவர்கள் வாந்தி யினால் நிறைந்த மேசைகளின் பின்னாலும் உலகத்தின் பின்னாலும் சென்று உலகத்தின் சிற்றின்பங்களை கலந்து விட்டனர். அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி உலகத்தின் காரியங் களில் பிரவேசித்து, கர்த்தருடைய வீட்டை அசுத்தமான அருவருப்பாக்கி, அங்கு நடனங்களையும் விருந்துகளையும் நடத்துகின்றனர். ஸ்திரீகள் அவலட்சணமான உடைகளையும் குட்டை கால் சட்டையும் உடுத்து, தலைமயிரைக் கத்தரித்து, அழகு படுத்தும் பொருட்களை உபயோகிக்கின்றனர் - வேதம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ள விதமாகவே .
152. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று ஏசாயா கூறியுள்ளான். ஏசாயா 5ம், 6ம் அதிகாரங்களைப் படியுங்கள். கடைசி நாட்களில் ஸ்திரீகள் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று அவன் கூறியுள்ளான். தேவனுடைய சாட்சிகள் உண்மையானவை. அவர்களை இரட்சிக்க அவர்கள் தேவனுடைய வல்லமைக்கு பதிலாக உலகத்தின் மாயையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அது யோவேலுக்குப் பிறகு எழுபது ஆண்டுகள் கழித்து.
153. இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் கழித்து ; நான் சில தீர்க்கதரிசனங்களை இங்கு எழுதி வைத்துள்ளேன். இயேசு பிறந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்க்கதரிசிகளுக்குள் பிரபுவாகிய (ஓ , என்னே ) யோவான் ஸ்நானன் இருந்தான். அவன் தேவனிடத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியும். கிறிஸ்துவின் வருகைக்கு முன்னோடியாகவும் இருந்தான் என்று எல்லா ஜனங்களும் அறிந்திருந்தனர். அது மறுபடியும் கடைசி நாட்களில் நடக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
154. இயேசு, “நீங்கள் எதைப் பார்க்க் வனாந்தரத்துக்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? ஸ்தாபனங்கள் இந்த வழியாகவும் அந்த வழியாகவும் திருப்பக் கூடிய ஒருவனையோ? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. நீங்கள் எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? அவன் வஸ்திரத்தை இப்படி இப்படி உடுத்துக் கொள்ள வேண்டும், அவன் எப்படி உடை உடுக்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லிக் கொடுக்க, மனோதத்துவ நிபுணனைக் கூட வைத்துள்ள ஒரு பெருமகனையோ? அப்படிப்பட்டவர்கள் குழந்தைகளை முத்தமிட்டு, ராஜாக்களின் அரண்மனைகளில் வாசம் செய்து, பொதுஜன பள்ளிக்கூடங்களில் சொற்பொழி வாற்றுபவர்கள். அப்படிப்பட்டவன் வீரன் அல்ல, அவன் போர்களத்துக்கு செல்லாதவன். இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று அறியாதவன். பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் தான் இதை செய்பவர்கள். ஆனால் நீங்கள் எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? இல்லை, தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே' என்றார். (மத். 11:7-9).
153. ஆட்டுத் தோலை உடலில் சுற்றினவனாய் காடுகளிலுள்ள மரக்கறியைத் தின்று வாழும் அந்த மகத்தான பிரபு கூறுவதைக் கேளுங்கள். அல்லேலூயா! அவனுக்கு வேத சாஸ்திர பள்ளி அனுபவம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் தேவனுடன் பேசின அனுபவத்தை அவன் கொண்டிருந்தான். அதை செய்ய வேண்டுமெனும் நோக்கத்துக்காகவே அவன் பிறந்தவன். அவன் வருவான் என்று வார்த்தை உரைத்தது. ஆம், ஐயா. அவன் யோர்தான் நதிக்கரையில் நடந்து, தன் பாதங்கள் மண்ணில் பதிந்தவனாய் பரிசேயரை நோக்கி, "ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்" என்றான் (மத். 3 : 9).
156. இந்த தீர்க்கதரிசிகளுக்குள் பிரபு, மேசியாவை அறிமுகம் செய்யும் பெரும்பேறைப் பெற்றிருந்தவன்; வானத் திலிருந்து விழுந்த ஒளியை அவன் கண்டு, அதை மேசியா வின் அடையாளமென்று அறிந்து கொண்டு, அவரிடம் சென்றான். அவன் அதற்கு சாட்சியாக இருந்தான். அதைக் குறித்து அவன் என்ன கூறினான்? அந்த தீர்க்கதரிசி சாட்சி யாகக் கூறின வார்த்தைகள் இவைகளே:
நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார்; அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்.
லூக் 3: 16-17. 
157. பரிசுத்த ஆவி சபைக்கு சாட்சியாக வருவார் என்று அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். "நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன். அது என் ஊழியம். நான் ஜலத்தினால் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறேன். அல்லேலூயா! ஆனால் எனக்கு பின் ஒருவர் வருகிறார். அதற்கு இந்த ஜலத்தினால் நான் சாட்சி கொடுக்கிறேன். ஆனால் ஒருவர் வருகிறார். அவர் இதைவிட பெரியது ஒன்றை அனுப்புவார். அவர் வேறொரு சாட்சியை அனுப்புவார் - தண்ணீர் அல்ல, ஆவி! அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ் நானங்கொடுப்பார்." அல்லேலூயா! தேவனுடைய சாட்சி, அவர் எல்லா சபை அங்கத்தினத்தையும் உங்களை விட்டு எடுத்துப் போடுவார். அவர் உண்மையான சாட்சியை உங்களுக்கு அனுப்புவார். ஏனெனில் அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. கோடாரியானது மரங்களின் வேரருகே வைத்திருக்கிறது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆகவே, மனந்திரும்பி, ஆயத்தமாயிருங்கள். காலம் சமீபமாயிருக்கிறது. அந்த மகத்தான பிரபு, எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!
158. அவன் தீர்க்கதரிசனம் உரைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய கர்த்தராகிய இயேசு தமது ஊழியத்தை - பூமியில் அவருடைய ஊழியத்தை - முடித்துக் கொண்டார். அவர், "நான் போவது உங்களுக்கு நலமாயிருக்கும். நான் போகாதிருந்தால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரார். அவரை நான் அனுப்பப் போகிறேன் கொஞ்ச காலத்திலே .... அவர் யாரென்று நீங்கள் அறிய விரும்புகிறீர்கள். கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களுடனே வாசம் பண்ணி, உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்" என்றார்.
159. லூக்கா 24 : 49ல்; அவருடைய ஊழியத்தின் முடிவில்; உலகத்தில் அவர் ஊழியம் முடிவு பெற்ற போது, அவர் லூக்கா 24 : 49ல், - இந்த சாட்சிகள் வாக்குத்தத்தம் பண் ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். ஏசாயா வாக்குத்தத்தம் பண்ணினதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். பிதாவானவர் தீர்க்கதரிசிகளுக்குக் காண்பித்து. அந்த எல்லா தீர்க்கதரிசிகளும் வாக்குத்தத்தம் பண்ணினதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்' என்றார். "என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். உங்கள் பிரசங்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். வேறொன்றையும் செய்யதிருங்கள். நீங்கள் எருசலேம் நகரத்துக்குச் சென்று, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் அங்கு இருங்கள்."
160. அது என்ன விதமான சாட்சியாக இருந்தது? "நீங்கள் இருபது ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி அல்லது வேத சாஸ்திரக் கல்வி பெறும் வரைக்கும் எருசலேமில் இருங்கள்" என்றா? அல்லது நீங்கள் பட்டம் பெறும் வரைக்கும் அங்கு இருங்கள்" என்றா? அல்லது, "நீங்கள் மற்ற மொழிகளைக் கற்றறியும் வரைக்கும் அங்கு காத்திருங்கள். அப்பொழுது அவர் உங்களை வெளிநாட்டு சுவிசேஷ ஊழியத்துக்கு அழைக்கும் பட்சத்தில், நீங்கள் அவர்களுடன் உரையாடலாம் என்றா? அல்ல, அதுவல்ல.
161. உன்னதத்திலிருந்து பெலன் இறங்கி வரட்டும். அது வரும்போது. எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். "நீங்கள் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங் கள்."ஓ தேவனே, ஜனங்கள் ஏன் அதை காண முடியவில்லை? அது சபையைச் சேர்ந்து கொள்வதல்ல, அது பெலனுக்காக காத்திருத்தல். "உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக் கப்படும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள். நான் அவரை அனுப்புவேன். அவர் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவர். அவரை நான் அனுப்புவேன். நான் சாட்சியாக அறிவிக் கிறேன். அவர் வரும்போது சாட்சி கூறுவார். அவர் தம்மைக் குறித்து பேசாமல், என்னைக் குறித்து பேசுவார். ஆமென்.
162. அவர் என்ன செய்வாரென்று கவனியுங்கள் : "நான் உங்களுக்குப் போதித்த யாவையும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வருவார். ஏதோ ஒரு வேதசாஸ்திரக் கல்வி அல்ல. என்ன? "நான் உங்களுக்குப் போதித்த யாவும் தேவனுடைய வார்த்தைகள் என்று உங்களை நினைவுபடுத்துவார். அப்பொழுது நீங்கள் உங்கள் வேதசாஸ்திர பள்ளி அனுபவம் அனைத்தும் மறந்து, நான் உங்களுக்குப் போதித்த இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வீர்கள். அவர் இவைகளை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருவார். அவர் வேறொன் றையும் செய்வார். அவர் வரப்போகிற காரியங்களையும் உங்களுக்குக் காண்பிப்பார். அவர் தான் உண்மையான சாட்சி. அவர் தான் தேவனுடைய உண்மையான சாட்சி. இந்த பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தை மறுபடியும் உங்களிடத்தில் கொண்டு வருவார். அது இரண்டாயிரம் ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டிருந்த போதிலும், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தைக் கொண்டு அவர்கள் அதை காலால் மிதித்து வந்திருந்த போதிலும் ; ஆனால் அவர் வரும்போது, அதை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். அது மாத்திரமல்ல, அவர் வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் உங்களோடே பேசுவார்; அவர் இவை எல்லாவற்றையும் செய்வார். தேவன் வாக்குத்தத்தம் பண்ணின அனைத்தையும் அவர் செய்வார். நான்..... பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை அனுப்பப் போகிறேன்."
163. பெந்தெகொஸ்தே நாளில் அது வந்தபோது, அவர் கள் என்ன சொன்னார்கள்? அவர்கள், "நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். உரைக்கப்பட்ட இவை நிறைவேறின தற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்" என்றனர். ஓ, என்னே! அது என்னை பக்தி பரவசப்படுத்துகிறது. அங்கு நின்று கொண்டு அவர்கள், "நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். எங்களுக்கு கல்விப் பட்டங்கள் கிடையாது" என்றனர். அவர்கள் யார்? அவர்கள் மதம் மாறினவர்கள் (proselytes). அவர்களில் சிலர் யூதர்கள், பிரபலமானவர்கள், அகந்தையுள்ளவர்கள், பிடிவாதமுள்ளவர்கள். ஆனால் அவையனைத்தும் அவர்களை விட்டு எடுபட்டன.
164. சுய விருப்பம் கொண்ட சீமோன் பேதுருவைப் பாருங்கள். அவன் மிகவும் பிடிவாதமுள்ளவன். அசுத்தமான எதையும் அவன் புசிக்க மாட்டான்.
165. சுய விருப்பம் கொண்ட பவுலைக் குறித்தென்ன? அவன் சபையை எல்லாவிடங்களிலும் துன்புறுத்தினான். ஆனால் அன்று தமஸ்குவுக்குப் போகும் வழியில் அவன் பரிசுத்த ஆவியாகிய அவரை சந்தித்த போது என்ன நடந்தது? அவன் பெஸ்துவுக்கு முன்பாக நின்று, "நான் பயித்திக்காரனல்ல. இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்கிறேன்" என்றான்.
166. அவர்கள், "நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்" என்றனர். பெந்தெகொஸ்தே நாளில் முன்று தெளிவான சாட்சிகள் உண்டாயிருந்தன.
167. முதலாவதாக, கடைசி நாட்களில் தேவன் தம் முடைய ஆவியை ஜனங்களின் மேல் ஊற்றுவார் என்னும் அந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தை.இந்த தீர்க்கதரிசிகள் கொண்டிருந்த சாட்சி தேவனுடைய வார்த்தையே. அது நிறைவேறிவிட்டது. அது ஒரு சாட்சி, தீர்க்கதரிசிகளின் செய்தி நிறைவேறுதல் என்பது . மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். பரியாச உதடுகளை அவர்கள் பெற்றிருப்பார்கள், அந்நிய பாஷையினால் இந்த ஜனத்தோடே பேசுவேன். அதோ அது நிறைவேறினது. அவர்களால் அதை மறுக்க முடியவில்லை. மூன்று சாட்சிகள் உண்டாயிருந்தன. தீர்க்கதரிசிகளின் வார்த்தை நிறைவேறினது ஒரு சாட்சி.
168. மற்றொரு சாட்சி, ஜனங்களே, "ஏதோ ஒன்று நடந்தது” என்று அவர்கள் சாட்சி கூறினர்.
169. "நான் அறையில் ஒளிந்து கொண்டிருந்தேன். நான் மிகவும் நாணமுள்ளவன். நான் அவமானமடைந்தேன்! அவர் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று அறிவேன். அங்கு சுற்றிலும் இருந்த கௌரவமான கூட்டத்தைக் கண்டு எனக்கும் அவமானம் தோன்றிற்று. ஆகையால் அதைக் குறித்து எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில் உணர்ச்சி வசப்பட்டு வேறொன்றைத் தொடங்கிவிடுவேனோ என்னும் பயம் உண்டானது"
170. இன்று சுயவிருப்பம் கொண்ட சபைகளில் உள்ள தொல்லை அதுவே. அவர்கள் அமைதியை அதிகமாக குலைத்து விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் தவறான ஒன்றை செய்து விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். ஓ, சுயவிருப்பம், சுய திருப்தி கொண்டுள்ளவர்களே! நமக்குத் தேவை பெந்தெகொஸ்தே தான். நமக்குத் தேவை, பரிசுத்த ஆவி வந்து நம்மை நிறைத்தலே .
171. அவர்கள், "நாங்கள் அவருடைய சாட்சிகள், ஏனெனில் நாங்கள் அதனால் நிறைந்திருக்கிறோம்" என்றனர். பேதுரு , "யூதர்களே. எருசலேமில் வாசம் பண்ணுகிறவர்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக. நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. "கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி யாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உண்மையென்பதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம், ஏனெனில் இப்பொழுது நாங்கள் நிறைக்கப்பட்டுள்ளோம்" என்றான்.' ஓ , என்னே!
172. அது தான் நமக்குத் தேவை. அது தான் சபைக்குத் தேவை. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உலகம் முழுவதிலுமுள்ள பதினேழு கோடி மக்களுக்கு தேவை மற்றொரு பெந்தெகொஸ்தே! அங்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் படிப்பதல்ல; ஆனால் பரிசுத்த ஆவியின் நிறைவு , கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் தேவனுடைய வார்த் தைக்கும் உங்களுக்குள் இருக்கும் ஒரு சாட்சி. யோவான் தேவ வசனத்தினிமித்தமும் கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினி மித்தமும் பத்மு தீவில் இருந்தான்.
173. அங்கு தீர்க்கதரிசிகளின் வார்த்தை நிறைவேறினது. அங்கு ஜனங்கள் சாட்சிகளாயிருந்தனர். அங்கு பரிசுத்த ஆவியே சாட்சியாயிருந்தார். மூன்று - பேர். மூன்று சாட்சிகளின் வாயினால் எந்த ஒரு வார்த்தையும் நிலைவரப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது. அது உண்மை .
அங்கு தீர்க்கதரிசிகளின் வார்த்தை நிறைவேறினது.
174. அங்கு ஜனங்கள், ஏதோ ஒன்று எனக்குச் சம்பவித்தது! ஏதோ ஒன்று எனக்குச் சம்பவித்தது! எனக்கு இனிமேல் பயமில்லை. எனக்கு மரணத்தைக் குறித்து பய மில்லை. எனக்கு எதைக் குறித்தும் பயமில்லை. ஏதோ ஒன்று சம்பவித்தது! என் வேதசாஸ்திரம் எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன். மனிதனால் உண்டாக்கப்பட்ட பாரம் பரியங்கள் அனைத்தும் நான் மறந்து விட்டேன். ஏதோ ஒன்று சம்பவித்தது ! நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக. என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். இவர்கள் வெறி கொண்டவர்கள் அல்ல" என்றனர். அவர்கள் தங்கள் நன்மதிப்பு அனைத்தும் இழந்து விட்டனர். அவர்கள் ஆவியினால் வெறி கொண்டிருந்தனர்.
175. அது தான் நமக்குத் தேவை. அது தான் நமக்குத் தேவை . நிதான புத்தியுள்ள, அறிவுள்ள ஒரு கூட்டம் ஜனங்கள் நடந்து சென்று தேவனை முகமுகமாய் சந்தித்து, கர்த்தாவே, என்னை சபை அங்கத்தினனாக செய்து விடாதேயும். என்னை ஒரு சாட்சியாக மாற்றும்! உமது ஆவியை என்மேல் ஊற்றி என்னை நிரப்பும். நான் உமது சாட்சியாக இருப்பேனாக" என்று கூறுவதே. அது தான் நமக்குத் தேவை. இன்று அது இல்லாத காரணத்தால் சபை அவதியுறுகிறது. அது சோகை நிலையில் உள்ளது. ஏனெனில் அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை புறக்கணித்து விட்டது.
176. ஆம், பரிசுத்த ஆவியே அதற்கு சாட்சியாக இருந்து, அது அப்படித்தான்' என்கிறார். அது அங்கிருந்தது. மனிதர் அதை மறுக்க முடியவில்லை.
177. இவர்கள் பள்ளியில் படித்து பெரிய கல்வி ஒன்றும் பெறவில்லை. இவர்கள் படிப்பறியாதவர்கள், பேதமை யுள்ளவர்கள், மீன் பிடிப்பவர்கள், விவசாயிகள். இவர்கள் எளியவர்கள். இயேசு சொன்னதை இந்த எளிய ஜனங்கள் சந்தோஷத்தோடே கேட்டனர் என்று வேதம் கூறுகிறது. இழி வானோர், அல்லது புகழ் வாய்ந்தவர் அல்ல. எளிய மக்கள் சந்தோஷத்தோடே கேட்டனர். அவர்கள், "நாங்கள் ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொண்டதற்கு சாட்சிகளாயிருக்கிறோம். எங்களுடைய சொந்த பாஷையே எங்களுக்கு சரியாகத் தெரியாது' என்றனர்.
178. ஆனால் மற்றவர்களோ, அவர்கள் பேசுவதை நாம் புரிந்து கொள்ளுகிறோமே, அது எப்படி? இவர்கள் கலிலேயரல்லவா?” என்றனர். கலிலேயர் ஏழை ஜனங்கள். அவர்கள் "நம்முடைய ஜென்ம பாஷைகளில் இந்தக் கலிலேயர் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?" என்றனர்.
179. தேவனுடைய வார்த்தை நிறைவேறினதென்று பரிசுத்த ஆவியானவர் தாமே சாட்சி கொடுக்கிறார்: "மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல்" என்னும் தேவனுடைய வார்த்தை . சாட்சி கொடுக்கிறார் ; ஒரு சாட்சி. இதுவே அதன் சாட்சி. நிச்சயமாக.
மூன்று சாட்சிகள் இருந்தன. எவை?
180. தீர்க்கதரிசிகளின் வார்த்தை தேவனுடைய வார்த்தையே. ஏனெனில் அந்த தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்த வார்த்தையைப் பேசவில்லை. அது தேவன் அவர்கள் வாயில் அருளிய தேவனுடைய வார்த்தை .
181. இங்கு நான் நின்று கொண்டு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் நார்வேயிலிருந்து வந்துள்ள மருத்துவர் ஒருவரைக் காண்கிறேன். அவர் ஜெபித்துக் கொள்வதற்காக நார்வேயிலிருந்து தொலை தூரம் இங்கு வந்துள்ளார். அன்றொரு இரவு தனிப்பட்ட பேட்டியில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அறைக்குள் வந்தார்.
182. அவர், சகோ. பிரான்ஹாமே, என்ன சொல்லப்படப் போகிறது என்று காண நான் காத்திருக்கிறேன்" என்றார்.
183. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவருடைய வாழ்க்கையின் முன் காலத்துக்கு சென்று, அவருடைய வாழ் நாளில் நடந்த ஒரு சம்பவத்தை அவரிடம் எடுத்துக் கூறி, அப்பொழுது என்ன நடந்ததென்றும், எந்நிலையில் இருந்த தென்றும், அதைக் குறித்த எல்லா விபரங்களையும் அவரிடம் கூறினார். அது என்ன? பரிசுத்த ஆவி சாட்சி கொடுத்தல்.
184. இங்கு வேறொரு ஆசாமியும் உட்கார்ந்து கொண்டி ருக்கிறார் என்று நினைக்கிறேன். சகோ. பாமரின் சபை அவரை அனுப்பினது. அவர் குழப்பமுற்று என்ன செய்வ தென்று அறியாதிருந்தார். அவர் ஏதோ ஒன்றைக் குறித்து குழப்பமடைந்திருந்தார். அவர் இங்கில்லை, வீட்டுக்குச் சென்று விட்டாரென்று நினைக்கிறேன். அங்கு ... சகோ. பாமர் அவரை இங்கு அனுப்பினார். சகோ. பாமர் ஒரு கடிதம் எழுதி, “சகோ. பிரான்ஹாமே, இது உங்களுக்கு அதிக பிரயாசையுள்ள நேரமென்று எனக்குத் தெரியும்" - அப்படி ஏதோ ஒன்று - ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அவரைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு நல்ல சகோதரன்' என்று கூறினார். சபையானது அவரை அனுப்பினது. அவர் பேட்டியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மனதின் ஆழத்தில் இருந்ததை, அவர் அதைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறுவதற்கு முன்பே, பரிசுத்த ஆவியானவர் அந்த ஆழத்தை அடைந்து, அதை வெளியே கொண்டு வந்து அவருக்குக் காண்பித்தார். அவர் மனமகிழ்ந்தார், அவருடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. ஏன்? தேவன் சாட்சி கொடுத்தார். யார் மூலம், வில்லியம் பிரான்ஹாமின் மூலமா? இல்லை. ஐயா , பரிசுத்த ஆவியின் மூலம். அவரே தேவனுடைய சாட்சி.
185. வேறொன்றை உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏன்... இங்கு உட்ஙகார்ந்திருக்கும் ஹிக்கின்பாதம் என்பவர் சபையில் டீகனாக இருந்தவர். அவர் டீகனாக நியமிக்கப் பட்டிருந்த காலத்தை முடித்துக் கொண்டு, இப்பொழுது விசுவாசமுள்ள அங்கனத்தினராக இருக்கிறார். இன்று காலை அவர் அந்நிய பாஷை பேசவும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் எழுந்து நின்றார். இன்று காலை அதற்கு அர்த்தம் உரைக்கப் பட்ட போது, பரிசுத்த ஆவியானவர், "நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதை உங்களுக்கு அறிவிக்க என் தாசனை நான் அபிஷேகித்திருக்கிறேன்" என்று ஏன் கூற வேண்டும்? ஓ, ஒ, ஓ! ஏன்? நான் இங்கு தலை குனிந்து நின்று கொண்டு அவர் சொல்வதைக் கேட்டேன். எனக்கு அப்பொழுது உண்டான கண்ணீரை என் இருதயத்தில் அடக்கிக் கொண்டேன். அவருக்கு ஒன்றுமே தெரியாது. நான் என்ன பேசப் போகிறேன் என்று அவரிடமோ அல்லது வேறு யாரிடமோ நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. நான் நேரடியாக பிரசங்க பீடத்துக்கு வருகிறேன். அதோ அவர். பேசவிருக்கும் பொருளை வெளிப்படுத்திக் கொடுத்து, அதைக் கேட்க ஜனங்கள் ஒழுங்காயிருக்கும்படி கூறினார். அவர், “நான் உங்களிடம் பேசுவேன். இந்த செய்தியை அளிக்க அவரை நான் அநேக நாடுகளுக்கும் அநேக ஜாதி களிடத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறேன். இன்று காலை உங்களிடம் பேசுவேன். அதை கவனமாய் கேளுங்கள். அவரை அபிஷேகம் பண்ணி அனுப்புவேன்" என்றார். ஒ , தேவனே! அது என்ன? தேவனுடைய உண்மையான . சாட்சியான பரிசுத்த ஆவி. அது என்ன? தேவன் மனிதனாகிய கூடாரத்துக்குள் வாசம் செய்தல். அல்லேலூயா!
186. என்ன? சபையே , ஆகையால் தான் அழுது. தேகத்தை குலுக்கி, அந்நிய பாஷை பேசி, அவ்விதமாக உணர்ச்சிவசப்படுதலை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறதில்லை. அவையெல்லாம் சரிதான். பாருங்கள்? அவையெல்லாம் சரிதான். ஆனால் பிசாசு அதை தத்ரூபமாக பாவனை செய்ய முடியும்.
187. ஆனால் பரிசுத்த ஆவி என்பது தேவன், மனிதனாகிய கூடாரத்துக்குள் வாசம் செய்யும் தேவன். அது உணர்ச்சியைக் காட்டிலும் மேலானது. அது அந்நிய பாஷை பேசுவதைக் காட்டிலும் மேலானது. அது ஆவியில் கூச்சலிடுவதைக் காட்டிலும் மேலானது. அது அழுவதைக் காட்டிலும் மேலானது. அது சபையை சேர்ந்து கொள்வதைக் காட்டிலும் மேலானது. அது தேவன் மனிதனுக்குள் வாசம் செய்தல். அந்த நபராகிய கூடாரத்துக்குள் தேவனே வாசம் செய்தல். அப்பொழுது அவன் பேசும்போது, அது தேவன் பேசுவதற்கு சமமாகும். அது தான் இயேசு கிறிஸ்துவின் சபை. அப்படித் தான் முதலாம் அப்போஸ்தல சபை இருந்தது.
188. இன்றைய சபைகள் எவ்வளவு வித்தியாசமாயுள்ளன! கிறிஸ்துவுக்குப் பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, கத்தோலிக்க சபை ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மனிதனுடைய தத்துவங்களைப் போதிக்கத் தொடங்கின. அன்று முதற்கொண்டு நாம் எவ்வளவாக வழிவிலகி வித்தியாசமாகி விட்டோம்!
189. இன்றைக்கு. "நாங்கள் நன்மை செய்யும் மக்கள், நாங்கள் சபையை சேர்ந்திருக்கிறோம்" என்று கூறிக்கொள்ளும் அநேகர் உள்ளனர். நான் கூறுவதை கவனமாய் கேளுங்கள். இன்று காலை இதை தான் சகோ . ஹிக்கின் பாதம் கூறினார் - ஹிக்கின்பாதம் அல்ல, பரிசுத்த ஆவியானவர் அவர் மூலம் பேசினார். நாம் நன்மை செய்யும் மக்களாக இருக்கிறோம், நாம் சபையை சேர்ந்து கொள்கிறோம். நாம் அன்பாகவும் இனிமையாகவும் இருக்க விரும்புகிறோம். பாருங்கள்? நாம் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்புவதில்லை - நிச்சயமாக இல்லை. நாம் இனிய கிறிஸ்தவர்களா யிருக்க விரும்புகிறோம். நாம் கிறிஸ்துவை உற்பத்தி செய்ய முனைகிறோம்.
190. கிறிஸ்து உற்பத்தி செய்யப்படுவதில்லை ! அல்லே லூயா! ஓ, நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்ள தேவன் எனக்கு பொருத்தமான சில சொற்களை அளித்தால் நலமாயிருக்கும்.
191. ஒரு செம்மறியாடு ரோமத்தை உற்பத்தி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுவதில்லை. அது இந்த ஆண்டு ரோமத்தை உற்பத்தி செய்ய வேண்டுமென்று அதனிடம் கூறப்படுவதில்லை. அது செம்மறியாடாக இருந் தால், அதில் தானாகவே ரோமம் உண்டாகும். அது நல்லது. இப்பொழுது நான், நான், நான் .... நான் ஒரு செம்மறியாடு என்று நினைக்கிறேன். நான் துரிதமாக சென்று என் எஜ மானுக்கு ரோமம் உற்பத்தி செய்து தரட்டும்" என்று ஒரு போதும் கூறுவதில்லை. அதைக் குறித்து அது கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது செம்மறியாடாக இருக்கும் வரைக்கும், அதில் ரோமம் வளரும். அது உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.
192. அது போன்று நீங்களும் பக்தியை உங்கள் சுய முயற்சியினால் உற்பத்தி செய்வதில்லை. "நான், எனக்கு... நான் இதை செய்யக் கூடாது, ஏனெனில் நான் ஒரு கிறிஸ்த வன். ஓ, சகோதரனே, மனித முயற்சியினால் தன்னைத் தான் இரட்சித்துக் கொள்ளப் பிரயாசப்படுதல் ! இருப்பினும் அதில் உத்தமமாக ஈடுபடுகின்றனர்.
193. காரியம் என்னவெனில், பலவீனமான பிரசங்க பீடங்கள், பலவீனமான பள்ளிகள், பலவீனமான வேதாகமக் கல்லூரிகள். அது தான் விஷயம், மனிதனுடைய வேதசாஸ் திரத்தைக் கற்பித்தல் . அவர்கள் அளிக்கின்றனர். நீங்கள், இன்றைய கிறிஸ்தவனின் பலம் என்று கூறுகிறீர்கள். அவர்கள் வெறுமனே .....
"நீங்கள் கிறிஸ்தவரா? "ஓ, நான் மெதோடிஸ்டு"  
"நீங்கள் கிறிஸ்தவரா? ஒ , நான்-நான்-நான்- பாப்டிஸ்டு.' அது தான் கிறிஸ்தவ மார்க்கத்தின் பலம்.
194. எவ்வளவு வித்தியாசம் வாய்ந்தது! அல்லேலூயா! அந்த ஆதி திருச்சபையைக் காட்டிலும் இது எவ்வளவு வித்தியாசம் வாய்ந்தது! ஆதி திருச்சபையினர் இப்படி யெல்லாம் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் ஒரு சக்தியினால் - பரிசுத்த ஆவியின் வல்லமையினால் - நிறைந்திருந்தனர். அது அவர்களை பாவத்தினின்றும் மரணத்தினின்றும் விடுதலை யாக்கினது. அவர்கள் பெயர் கிறிஸ்தவர்களாக இருக்க வில்லை. அவர்களுடைய இருதயங்களில் தேவ அன்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அது அவர்களை மரணத்துக்கு அனுப்பினது.
195. என் மகள் பெக்கி அன்றொரு இரவு, 'க்ளேடியேட்டர்ஸ்' (Gladiators) என்னும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் (ரோமாபுரியில் மற்றவர்களின் கேளிக் கைக்காக சண்டையிட்டவர் க்ளேடியேட்டர்ஸ்' என்றழைக்கப் பட்டனர் - தமிழாக்கியோன்). அவள், அப்பா, இதை கேளுங்கள்" என்று அதை படித்துக் காண்பித்தாள். மன்னிக் கவும், இந்நேரத்தில் அவனுடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. அவன் கிறிஸ்தவ இளைஞன். சண்டையிடுவதற்கென்று அவன் ரோம அரங்கத்திற்குள் தூக்கியெறியப் பட்டான்.
அந்த அரங்கத்தில் நான் நின்று கொண்டு ஜெபம் செய்திருக்கிறேன். அந்த பழைய மதில்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.
196. அவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு சண்டையிடுவதைப் பார்த்து ரசிப்பது வழக்கம். அவர்கள் ஒருவரை யொருவர் கொல்ல வேண்டும். தேவன் உரைத்து ..... பண்டைய காலத்தில் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொன்றனர். அவ்வளவுதான், தேவன் அப்படிப்பட்ட செயலுக்கு விரோதமாயிருந்தார்.
197. அவர்களில் மிகவும் தைரியசாலியான ஒருவன்.... கிறிஸ்தவ மார்க்கத்தின் முதன்மையான அடை யாளங்களில் ஒன்று, ஒரு மனிதனைக் கொல்ல மறுப்ப தாகும். கத்தியினால் ஒருவனைக் கொல்வது மாத்திரமல்ல, இன்னும் அநேக வழிகளில் அவனை நீங்கள் கொல்ல வகை யுண்டு - ஒருவனுடைய ஒழுக்கத்தைக் குறித்து அவதூறாகப் பேசுவதன் மூலம். இப்படி அநேக வழிகளில் நீங்கள் செய்யலாம். 
198. இந்த க்ளேடியேட்டருக்கு எதிராக அவர்கள் ஒரு சிங்கத்தை அவிழ்த்து விட்டனர். அவன் தேவனுடைய பராக் கிரமத்தையும் வல்லமையும் கொண்டு தன் பட்டயத்தால் - கத்தியால் -- அந்த சிங்கத்தைக் கொன்று போட்டான். ஜனங்கள் கைகொட்டி ஆர்ப்பரித்தனர். அது தீரமான செயல். அவர்கள் வேறொன்றை அவிழ்த்து விட்டனர். அதையும் அவன் தன் பட்டயத்தால் கொன்று போட்டான். அதன் பிறகு அவர்கள் ஒரு பலசாலியான, உயரமான, கறுத்த ஆப்பிரிக்க அஞ்ஞான மனிதனை அரங்கத்துக்குள் விட்டனர். இந்த கிறிஸ்தவன் அவனுக்கு எதிராக சண்டையிட வேண்டும். அவன் அவனுடன் சண்டையிட விரும்பவில்லை ஆயினும் சண்டையில் இவன் அந்த ஆப்பிரிக்கனை குத்தி கீழே வீழ்த்தி, பட்டயத்தை அவன் மேல் நீட்டினான். அந்த ஆப்பிரிக்கன், "ஐயா, என்னை வேகமாக கொன்று போடும். அப்பொழுது நான் அவதியுறமாட்டேன். என்னைத் துன்புறுத்தாதேயும். என்னை வேகமாக கொன்று போடும்" என்று கெஞ்சினான்.
199. இந்த கிறிஸ்தவன் தன் பட்டயத்தை வீசி எறிந்து விட்டு, கவசத்தைக் கழற்றி விட்டு, அரசனின் முன்னிலையில் நடந்து சென்று, "ராஜாவே, நான் ஒரு கிறிஸ்தவன். ஒருவரையொருவர் கொலை செய்யக்கூடாதென்று என் கர்த்தரும் இரட்சகருமானவர் எங்களுக்கு கட்டளை யிட்டுள்ளார். நான் காட்டு மிருகங்களைக் கொல்வேனேயன்றி, என் சகோதரனை அல்ல. ஒரு மனிதனைக் கொல்ல நான் மறுக்கிறேன்" என்றான்.
200. ரோம அதிபதிகள் எல்லோரும் எழுந்து நின்று, ரோமாபுரியின் சத்தத்துக்கு கீழ்படிய ஒரு க்ளேடியேட்டர் அடிமை மறுப்பதா' என்று சொல்லி,
201. அந்த ஆப்பிரிக்கனை நோக்கி, "நீ குதித்தெழுந்து அவனுடைய பட்டயத்தை வாங்கி அவனைக் கொன்று போடு என்றனர். அவனும் குதித்தெழுந்து, கிறிஸ்தவனுடைய பட்ட யாதை கையில் வாங்கிக் கொண்டான். இந்த கிறிஸ்தவன் ஆயுதம் களைந்தவனாய், தன் கரங்களை விரித்தான். அந்த ஆப்பிரிக்கன் பட்டயத்தை அவனுடைய இருதயத்தில் ஊடுரு வினான். இரத்தம் களகளவென்று வெளியே பீறிட்டு வந்தது. அது அவன் நுரையீரல்களையும் நிறைத்தது. அப்பொழுது அந்த கிறிஸ்தவன் முழங்கால்படியிட்டு. "கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்" என்றான். நாமோ கிறிஸ்துவுக்காக துன்பம் அனுபவிப்பதாக கூறிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நம்முடைய சாட்சி எம்மாத்திரம்?
ஓ , எங்கள் முற்பிதாக்களின் விசுவாசம்! இருண்ட நிலவறை, நெருப்பு, பட்டயம் இருந்த போதிலும் இன்னமும் ஜீவிக்கிறது.
202. அந்த மனிதர் மரணத்தின் மூலம் கிறிஸ்துவை அறிக்கையிட்டனர். அவர்கள், என்னவாயிருந்தனர்? அவர்கள் சாட்சியாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தனர். ஆதி கிறிஸ்தவர்கள் மரணத்துக்கு பயப்படவேயில்லை. அதன் பிறகு ரோம சாம்ராஜ்யம் , அவர்களுக்கு ஏதோ உள்ளது என்பதை அறிந்து கொண்டது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அவர்களை நியமித்து, ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டு அதை ஒரு உத்தியோகமாக்கி, சாட்சியாகிய பரிசுத்த ஆவி யைப் பெறாமலேயே அவர்களை அதில் நியமித்தனர்.
203. இன்றைக்கு அவர்கள் அந்நிலையில் தான் உள்ளனர். லூத்தரன்கள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரி யன்கள், மிக அதிகம் பெந்தெகொஸ்தேயினர், அவ்வாறு அழைக்கப்படுபவர்கள். நாம் தேவனுடைய சாட்சியைப் பெற்றுக் கொள்ளாமலே பயணம் சென்று கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியே நமது சாட்சி.
204. இன்றைய சபை, சபையைச் சேர்ந்து கொள் ளுங்கள்" என்பதாய் உள்ளது. ஒரு மனிதன் சபையைச் சேர்ந்து கொள்ளும் போது, ஒரு புது 'கோட்' டை அணிந்து கொள்கிறான்” என்னும் பழமொழி ஒன்றுண்டு. ஆனால் அவன் சாட்சியால் நிரப்பப்படும்போது, அவர்கள் ஒரு புது மனிதனை அந்த கோட்டுக்குள் புகுத்துகின்றனர். அது மனிதன் அணிந்து கொள்ளும் புது கோட்' அல்ல, அது கோட்டுக்குள் இருக்கும் புது மனிதன்! 'கோட்டுக்குள் அதிக மனிதர்களே இன்றைய நமது தேவையாயுள்ளது. நான் குருவானவர்களின் 'கோட்டை குறிப்பிடுகிறேன். ஆம், அது வித்தியாசமாயிருக்க வேண்டும். ஆதி....
205. இன்றைய சபையானது தன் சொந்த நற்கிரியைகளினாலே தன்னை இரட்சித்துக் கொள்ள முயல்கிறது. "ஓ, நான் ஒரு கிறிஸ்தவன், நான் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். நான் இதை செய்ய வேண்டும்.
206. ஆனால் ஆதி திருச்சபையிலிருந்தவர்கள் என்ன செய்தனர்? காத்திருந்தனர். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முயலவில்லை. தேவனே வந்து அவர்களை மாற்றிப் போட அவர்கள் காத்திருந்தனர் - பரிசேயர்களிலிருந்து சாட்சிகளாக.
207. இன்றைக்கு நமக்கு தேவை என்னவெனில், தேவனுடைய சாட்சியாகிய பரிசுத்த ஆவியானவர் வந்து நம்மை குளிர்ந்த, பிடிவாதமான பரிசேயர் கூட்டமாக இருப்பதிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாக மாற்ற அவருக்காக காத்திருப்பதே. அல்லேலூயா! பரிசுத்த ஆவியானவர் ஜனங்கள் செல்லும் ஒரு காலியான இடமல்ல.
208. சபையும் பத்து கோடி டாலர் பெறுமான ஒரு பெரிய மண்டபம் அல்லது கட்டிடம் கொண்ட, ஜனங்கள் செல்லும் ஒரு காலியான இடமல்ல. நாம் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து, நமக்குள்ள பணம் அனைத்தும் அப்படிப்பட்ட ஒரு கட்டிடம் கட்ட செலவழிக்கிறோம். சபையானது முன்னை விட தற்பொழுது அதிக பணம் படைத்து நல்ல நிலையில் உள்ளது. ஆனால் நாம் கட்டிடங்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு ஒரு பெரிய ஸ்தாபனம் மிஸ்ஸௌரியில் அறுபது லட்சம் டாலர் செலவில் ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் "கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது" என்று சதா சொல்லிக் கொண்டிருக்கின்றனர் - ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனம். பெந்தெகொஸ்தேகாரரும் மற்றவரும் பக்கத்திலுள்ள சாலைகளிலிருந்து வந்து பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி, அதிக கல்வி பயின்ற போதகர்களை தங்களுக்கெனப் பெற்றுள்ளனர்.
209. ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவிலிருந்தும், தெய்வீக சுகமளித்தலிலிருந்தும், பரிசுத்த ஆவியின் வல்லமையிலிருந்தும் விலகி விட்டனர்.
210. இப்பொழுது நாம் செய்வதெல்லாம் மெதோடிஸ் டுகளுடன் போட்டியிடுவதே. இப்பொழுது நாம் இந்த பெரிய சபைகளின் சங்கங்களைச் சேர்ந்து கொண்டு. நாம் சுவிசேஷக விஷயத்தில் கொண்டிருந்த நிலையை மறுதலித்து விட்டோம். அதற்கு காரணம் நாம் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு சங்கத்துடன் இணைந்து விட்டதாலே. இப்பொழுது அவர்கள் உலக சபைகள் ஆலோசனை சங்கத்தை சேர்ந்து விட்டனர். என்ன ஒரு வெட்கமான செயல்! என்ன ஒரு அவமானம்! மரித்துக் கொண்டிருக்கும் உலகிற்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நல்ல வாய்ப்புகள் உள்ள போது, இது என்ன பரிதாபமான செயல்! கம்யூனிஸம் உலகத்தை அரித்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ மார்க்கத்தின் பெலவீனத்தின் விளைவாகவே கம்யூனிஸம் உருவானது - கிறிஸ்தவ மார்க்கம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் மார்க்கம்.
211. ஜீவனுள்ள தேவனுடைய சபை எழுந்து காலூன்றி நின்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு சாட்சியாக விளங்கி உலகத்தை அசைப்பதற்கு இன்றைக்கு அதற்கு எத்தகைய வாய்ப்பு உள்ளது!
212. வேதாகமத்தில், எரேமியா 42ம் அதிகாரத்தில், இப்பொழுது அவர்களுக்குள்ள ஒரு நேரத்தைப் போல் அக்காலத்திலிருந்தவர்களுக்கு உண்டாயிருந்தது. பாபிலோன் ராஜா சண்டையிட்டு அவர்களை சிறைபிடித்துக் கொண்டு போய் விடுவானோ என்னும் பயம் அவர்களில் குடி கொண்டிருந்தது. பிரபலம் வாய்ந்த அனைவரும், பெரிய உத்தியோகஸ்தர்களும் தீர்க்கதரிசிகளில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மதாபிமானமுள்ளவர்கள் என்று காண்பித்துக் கொள்ள அவர்கள் தீர்க்கதரிசிகளை நம்புவதாக கூறிக் கொண்டனர். எனவே அவர்கள் எரேமியாவை வரும்படி அழைத்தனர். அவன் பைத்தியக்காரன் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அவர்கள் அவனை வனாந்தரத்திலிருந்து அழைத்து வந்தனர். ஒருக்கால் அவன் தன்னைக் கம்பளியால் சுற்றிக் கொண்டு, தலைமயிர் முகத்தின் மேல் தொங்கினவனாய், மரக்கறி புசிப்பவனாய், வனாந்தரத்தில் என்ன கிடைக்கிறதோ அதை புசிப்பவனாய் இருந்திருக்கக் கூடும். அவர்கள் அவனை அணுகி, "தீர்க்கதரிசியே, கர்த்தருடைய சித்தத்தை அறிந்து எங்களுக்கு வெளிப்படுத்தும். நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியப்படுத்தும். அது நன்மையானாலும் தீமையானாலும் நாங்கள் கர்த்தருக்குக் கீழ்படிவோம்" என்றனர். அவன், அப்படியானால் உங்களுக்காக நான் கர்த்தரை தேடுவேன்" என்றான்.
213. அவன் சென்று, கர்த்தர் அவனிடம் பேசும் வரைக்கும் பத்து நாட்கள் காத்திருந்தான். அவன் திரும்பி வந்து எல்லோரையும் ஒன்று கூட்டி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் பெற்றிருக்கிறேன். ஜனங்களே. கேளுங்கள். அல்லேலுயா! நீங்கள் பாபிலோன் ராஜாவுக்கு பயந்திருக்கிறீர்கள்", நாம் ருஷியாவைக் கண்டு பயப்படுகிறது போல, அவன் வரப்போகிறான் என்று நீங்கள் அறிந்து எகிப்துக்கு தப்பியோட ஆயத்தமாயிருக்கிறீர்கள்" என்றான்.
214. நாமும் கூட அணுகுண்டுகளுக்கு பயந்து ஒரு பட்டினத்திலிருந்து மறுப்பட்டினத்துக்கு தப்பியோடி, பாதுகாப்பு இடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால் என்ன பயன்? பாவத்தைக் குறித்த பிரச்சினையை விலக்குங்கள்!
215. எரேமியா , "நீங்கள் தேவனிடத்தில் திரும்பி, உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, உங்கள் இருதயங்களை அவரிடம் திருப்பி, அவருடைய கற்பனைகளையும் நியமங்களையும் கைக்கொண்டு நன்மையானதை செய்வீர் களானால், நீங்கள் பாபிலோன் ராஜாவுக்கு பயப்பட வேண்டியதில்லை" என்றான்.
216. தேவனுடைய சாட்சி கூறினதை அந்த ஜனங்கள் கேட்ட போது என்ன சொன்னார்கள் தெரியுமா? அவர்கள், "நீ பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறாய். நாங்கள் எகிப்துக்குப் போகிறோம்” என்றனர்.
217. அவர்கள் அங்கு சென்ற போது, எரேமியா இரண்டு கற்களை எடுத்து அதை சூளையின் களிமண்ணிலே புதைத்து. என் ஊழியக்காரனாகிய நெபுகாத்நேச்சார் இங்கு வந்து அதை எப்படியும் கைப்பற்றுவான். எப்படியும், நீங்கள் பட்டயத்தாலே சாவீர்கள்" என்றான்.
218. சகோதரனே, பழமை நாகரீகம் கொண்ட பரிசுத்த ஆவி அனுப்பும் மனந்திரும்புதலைத் தவிர, ஜனங்களுக்காக காத்திருக்கும் இந்த ஆக்கினையிலிருந்து இன்று தப்பித்துக் கொள்ள வேறு வழியே இல்லை.
219. என் சகோதரருக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. என்னைக் குறித்தும் நான் கூறுகிறேன். நாமெல்லாரும் சவிசேஷகர்கள். பில்லி கிரகாம் ஒரு பெரிய சுவிசேஷகர். ஓரல் ராபர்ட்ஸ் ஒரு பெரிய சுவிசேஷகர். அவர்கள் பெரியவர்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம்.
220. ஆனால் நமக்கு சுவிசேஷகர்கள் தேவையில்லை. அது என்ன? அரசியலை அமைத்து, மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டு கள், பெந்தெகொஸ்தே குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, அவர்கள் ஒத்துழைக்கும்படி செய்து, நாம் எவ்வளவு பெரியவர்களாக இருக்க முடியுமென்றும், எத்தனை பேர்களை நாம் வெளியே இழுக்க முடியுமென்றும் காண்பிக்க விரும்புகிறோம். அது நமக்குத் தேவையல்ல.
221. பரிசுத்த ஆவியானவர் வல்லமையுடன் வந்து விடுவிக்கும் வரைக்கும் நாம் தேவனிடத்தில் காத்திருப்பது அவசியம். நமக்கு இரட்சிப்பை எடுத்துரைக்கிறவர்களே (salvationists) தேவை , சுவிசேஷகர்கள் (evangelists) அல்ல . நமக்கு இரட்சிப்பு அவசியம். இந்த பர்வதத்தை நாம் வென்று விடலாம். அவர்கள் நமக்கு முன்னால் கட்டிக்கொண்டிருக்கும் இந்த பர்வதம் எம்மாத்திரம்? அது சமபூமியாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். தேசத்திலே தங்கி யிருங்கள். அது உண்மை .
222. இன்றைய நமது தேவை (எழுப்புதல் அல்ல) வேல்ஸ் நாட்டின் எழுப்புதலின் போது கிடைக்கப் பெற்ற இரட்சிப் பின் அனுபவத்தைப் போன்ற ஒரு அனுபவமே . அந்த எழுப்புதலில், கடைகளை வைத்திருந்தவர்களின் இருதயம் குத்தப்பட்டு, அவர்கள் மனங்கசந்து கண்ணீர் விட்டனர். மது கடைகளும் சிற்றின்ப இடங்களும் மூடப்பட்டு, அவர்கள் மனங்கசந்து கண்ணீர் விட்டு ஜெபித்தனர். அதுவே இன்று நமக்குத் தேவை. அன்றொரு நாள் அவர்கள் செய்தது போல் இலட்சத்து ஐம்பதாயிரம் பேரை ஒன்று திரட்டி, சிலர் "மரியாளே வாழ்க" என்று சொல்வதும், மற்றவர் வேறொன்றைச் சொல்வதும், ஒரு சிறு ஜெபத்தைக் கூறிவிட்டு சமுதாய மது அருந்தி, வீடு திரும்பினது போன்ற ஒன்றல்ல. அதுவல்ல ஜெப தினம். நாம் மனங்கசந்து அழுது, துக்கித்து, தேவன் தமது சாட்சியாகிய பரிசுத்த ஆவியை அனுப்பும் வரைக்கும் காத்திருக்கும் ஒரு தினம் நமக்கு அவசியம். காலியான இடமல்ல, காலியான ஸ்தாபனம் அல்ல, ஆனால் மனிதனாகிய கூடாரத்துக்குள் வாசம் செய்யும் தேவன்.
223. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் வழி வழியாக ஒவ்வொரு சந்ததிக்கும் முடிவுபரியந்தம் சாட்சியா யிருப்பார் என்று இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் கூறியுள்ளார். அவர், இந்த அடையாளங்கள்! நீங்கள் உலக மெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன : என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்." எத்தனை காலம் சாட்சி நீடித்திருக்கும்? உலகத்தின் முடிவு பரியந்தம் ! எத்தனை காலம்? ஒவ்வொரு சந்ததியிலும். "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதென்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றார். அவர் அனுப்பப் போகும் பரிசுத்த ஆவி காலத்தின் முடிவு வரைக்கும். ஒவ்வொரு சந்ததிக்கும் சாட்சியாக இருக்குமென்று இயேசு கூறினார்.
224. அவர் அவ்வாறு கூறினதால், நாம் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்! ஆமென். கவனியுங்கள், கூர்ந்து கவனியுங்கள், நான் முடிக்கவிருக்கும் தருணத்தில், உங்கள் புரிந்து கொள்ளும் தன்மையை இப்பொழுது தரித்துக் கொண்டு கவனியுங்கள். அவருடைய ஆவியைப் பெற்ற நாம் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்.
225. "கடைசி நாட்களில் விசுவாச துரோகம் நேரிட்டு, குளிர்ந்த, பெயரளவில் உள்ள, வல்லமையற்ற சபை காலம் உண்டாயிருக்கும்" என்று அவருடைய வார்த்தை சாட்சி பகருகின்றது. அக்காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் - வல்லமையற்ற சபை. தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு." "ஒரு மனிதன் தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து தன்னைத் தான் தேவனென்று காண்பிக்கும் காலம் வரும். அவன் தேசங்களை அரசாளுவான்" என்று அவர் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். இவையனைத்தும் எவ்வளவு பிழையின்றி நிறைவேறி வருகின்றன! தேவனுடைய வார்த்தை எவ்வளவு பிழையற்றதாய் அமைந்துள்ளது!
226. முன் காலத்திலிருந்த நெபுகாத்நேச்சார் ராஜா அந்த சொப்பனத்தைக் கண்டபோது, தானியேல் அதற்கு அர்த்தம் உரைத்தான். எவ்வாறு அந்த ராஜ்யங்கள் ஒவ்வொன்றும் - பாபிலோனிய, மேதிய பெர்சிய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்கள் - தேவன் உரைத்த விதமாகவே , அந்தந்த காலத்தில், குறித்த நேரத்தில் விழுந்து போயின!
227. தேவனுடைய வார்த்தை உண்மையுள்ள சாட்சியாயுள்ளது! 'கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும். மனி தருடைய இருதயம் பயத்தினால் சோர்ந்து போகும். ஆபத்துகள் வரும். ராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று விரோதமாய் எழும்பும். சபையில் விசுவாச துரோகம் நேரிடும். ஜனங்கள் எழும்பி, தங்களைப் பிரபலமானவர்களாகக் காண்பித்துக் கொண்டு, சபையை வல்லமையிலிருந்து விலக்குவார்கள். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிப் பார்கள்" என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. சபையை சேர்ந்து கொள்ளுதல்! சபை அந்நிலையை அடையு மென்று அவர் கூறியுள்ளார்.
228. தேவனுடைய வார்த்தை நிறைவேறினதற்கு நாம் சாட்சிகளாயிருக்கிறோம்! சபையானது அந்நிலையை அடைந்துள்ளது. ஒவ்வொரு ஸ்தாபனமும் இப்பொழுது அந்நிலையில் உள்ளது. தேவனுக்காக அனல் கொண்டு பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அடையாளங்கள் அவர்களைத் தொடரும் ஒரு ஸ்தாபனத்தையாவது எனக்குக் காண்பிக்கும் படிக்கு நான் எவருக்கும் சவால் விடுகிறேன். நீங்கள் எழுந்து நின்று, அப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தை எனக்குக் காண்பியுங்கள். அப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனம் எதுவுமில்லை. அப்படி உண்டாயிருந்ததாக எழுதி வைக்கப்படவில்லை. அது உண்மை . அவை யாவும் வல்லமையற்றதாகவும் மரித்துப் போன நிலையிலும் உள்ளன. அதை புரிந்து கொள்ளுங்கள்.
229. ஆனால் அந்நாளில் ஒரு உண்மையான சபை ஒரு சிறு மந்தையை - மீதியானவர்களை - கொண்டதாயிருக்கும் என்றும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். தங்கள் தேவனை அறிந்த ஜனங்கள் இருப்பார்களென்றும் அவர்கள் கடைசி நாட்களில் வல்லமையான காரியங்களைச் செய்வார்களென்றும் அவர் தீர்க்கதரிசியின் மூலம் கூறியுள்ளார்.
230. கடைசி நாட்களில் சாயங்கால வெளிச்சம் உண்டாயிருக்குமென்று அவர் கூறியுள்ளார். தீர்க்கதரிசி அவ்வாறு கூறியுள்ளான். தேவனுடைய உண்மையுள்ள சாட்சி, சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்றான். சாயங்கால வெளிச்சம் என்றால் என்ன? அது காலை வெளிச்சத்தைப் போன்றது. ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல" என்று தீர்க்கதரிசி உரைத்தான். இன்று வெளியே உள்ளது போல் மப்பும் மந்தாரமுமான நாள். எப்படி செல்வதென்று அறிந்து கொள்ள போதிய வெளிச்சம் உள்ளது. "சாயங் காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்றான். அது எப்படி யிருக்கும்? அவர்கள் எல்லோரும் ஆதி காலத்துக்கு திரும்பச் செல்கின்றனர். "கடைசி நாளில் சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கும்.
231. கடைசி நாட்களில் ஒரு தீர்க்க தரிசி எழும்பி", மல்கியா 4, லோத்தின் நாட்களில் இருந்த அடையாளங்களைக் காண்பித்து, 'பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவா சத்துக்குத் திரும்புங்கள், மூல சத்தியத்துக்குத் திரும்புங்கள், வேதாகமத்துக்குத் திரும்புங்கள் ! ஸ்தாபனத்திலிருந்து விலகி மூல உபதேசத்துக்குச் செல்லுங்கள்! மூல பெந்தெகொஸ்தேவுக்கு, மூல பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு, தேவனுடைய மூல வல்லமைக்குச் செல்லுங்கள்' என்று எச்சரிப்பான்" என்று அவர் கூறியுள்ளார். அது நிகழுமென்று வார்த்தை சாட்சி பகருகின்றது.
சாங்காலத்தில் வெளிச்சமுண்டாகும் 
மகிமையின் பாதையை நீ நிச்சயம் 
கண்டுகொள்வாய் இயேசுவின் 
விலையேறப்பெற்ற நாமத்தினால் 
அடக்கம் பண்ணப்படும்
தண்ணீரின் வழியிலே இன்றைய 
வெளிச்சம் உள்ளது வாலிபரே, வயோதிபரே, 
உங்கள் பாவங்கள்
அனைத்துக்கும் மனந்திரும்புங்கள் 
அப்பொழுது பரிசுத்த ஆவி நிச்சயம் உள்ளே
பிரவேசிப்பார் சாயங்கால வெளிச்சம் 
வந்து விட்டது தேவனும் கிறிஸ்துவும் 
ஒருவரே என்பது உண்மை .
232. தேவனுடைய சாட்சியாகிய பரிசுத்த ஆவி ; நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவி எந்த ஸ்தாபனத்துடனும் தொடர்பு கொள்ள மாட்டார். நீங்கள் தேவனை ஒரு ஸ்தாபனமாகச் செய்ய முடியாது. அவர் தேவன! அது என்ன செய்யும்? முதலில் எப்படி இருந்ததோ அதற்குச் செல்லும். அது தொடக்கத்துக்கு திரும்பிச் செல்லும், அது எங்கு தொடங்கினதோ அங்கு திரும்பிச் செல்லும். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த விதமாகவே இதுவும் கொடுக்கும். அது பரிசுத்த ஆவியை போதித்த விதமாகவே இதுவும் போதிக்கும். அது ஜனங்களுக்குப் போதித்த விதமாகவே இவர்களும் போதிப்பார்கள். அவர்கள் செய்த விதமாகவே இவர்களும் ஸ்தாபனங்களிலிருந்து விலகியிருப்பார்கள். அவர்கள் செய்தது போலவே வர விருப்பமுள்ளவர்களுக்கு இது இடமளிக்கும். அவர்களைப் போலவே இவர்களும் சுத்தமும் பரிசுத்தமுமாய் இருப்பார்கள். அவர்களைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப் பார்கள். அவர்களைப் போலவே இவர்களும் பயமில்லாதவர்களாய் இருப்பார்கள். அவர்களுக்கு நடந்த அதே கிரியைகள், இந்த கடைசி நாட்களில் உள்ளவர்களுக்கும் சாயங்கால வெளிச்சத்தின் போது நடக்கும்.
வெளியே அழைக்க தேவன் அந்த சத்தத்தை அனுப்புகிறார்.
233. நமக்கு எல்லாவிதமான சாட்சிகளும் உண்டு. நமக்கு எல்லாவிதங்களும் உண்டு. நமக்கு மெதோடிஸ்டு சாட்சி, பாப்டிஸ்டு சாட்சி, பிரஸ்பிடேரியன் சாட்சி, கத்தோலிக்க சாட்சி போன்ற சாட்சிகள் உள்ளன. கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, சபையின் நான்கு கட்டங்களைக் குறித்து பிரசங்கம் செய்யப் போகிறேன் கர்த்தருக்கு சித்தமானால். இன்று நமக்கு எல்லாவிதமான சாட்சிகளும் உள்ளன. ஆனால் ஒரே ஒரு உண்மையான சாட்சி உள்ளார்.
234. தேவன் உண்டென்று இயற்கை இப்பொழுதும் சாட்சி பகருகின்றது. அவர் முன்பிருந்தது போல இன்னமும் தேவனாயிருக்கிறார் - முதலாம் மரத்தை ஆதியில் சிருஷ்டித்தது போல. அது சரியா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் -
235. முன்காலத்து தீர்க்கதரிசிகள் சாட்சியுரைத்து, தேவனுடைய வார்த்தையை உடையவர்களாயிருந்து, தேவனுடைய வார்த்தையை உரைத்தனர். அது அவர்கள் முன்னிலையில் நிறைவேறிற்று. "உங்களுக்குள்ளே ஒருவன் ஆவியைப் பெற்றவனாக அல்லது தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப் படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அவன் உரைத்தது நிறைவேறினால் அவனுக்குச் செவிகொடுங்கள்" என்றார்.
236. அதே தேவன் அதே கிரியைகளை இன்று செய்து கொண்டு வருகிறார். அதே கிரியைகள் இன்று நடப்பதை நாம் காண்கிறோம். அவர் சாயங்கால வெளிச்சம் உண்டாகு மென்று கூறினார். "சூளையைப் போல் பூமியை எரிக்கும் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்னே பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்பும் ஒருவன் எழும்புவான்".
237. அணுகுண்டுகள் மேலே தொங்கிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அன்று ருஷியா வெடித்த அணு குண்டு, ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டை விட ஐம்பது மடங்கு அதிக உஷ்ணம் கொண்டதாயும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்ததாகக் காண்கிறோம். ஜப்பான் சமாதானத்துக்காக அழுது ஜெபித்துக் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் வரைக்கும் மக்களின் கண்களையும் நாவுகளையும் எரித்துப் போட்டது. ருஷியா வெடித்த அணுகுண்டு ஐம்பது மடங்கு சக்தி வாய்ந்தது. அதையடுத்து விழுந்த கதிரியக்கத் துகள்கள் (fall our) அமெரிக்காவில் விழாமல் தப்பினது. ஆனால் அடுத்த முறை அது அமெரிக்காவில் விழும். கதிரியக்க விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாக்கும் ஸ்தலங்களா?
238. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் , விலகுவதற்கு (fall out) இப்பொழுது நேரம் வந்து விட்டது - உலக காரியங்களிலிருந்து விலகுவதற்கு. "சகோ. பிரான்ஹாமே, நாம் எங்கே விழுவோம் (fall)? தேவனுடைய கரங்களில். அது உண்மை . பரிசுத்த ஆவியானவர் அதற்கு சாட்சியாயிருப்பாராக. அவரே தேவனுடைய சாட்சி.
ஜெபம் செய்வோம் : சகோ பிரான்ஹாமே, நாம் எங்கே விழுவோம்?"
239. இதை நாம் விசுவாசிக்கிறோம். வார்த்தை உண்மை யென்று நாம் விசுவாசிக்கிறோம். அது உண்மையென்று நாம் காண்கிறோம். அவர் இதை கடைசி நாட்களுக்கென்று தீர்க்க தரிசனம் உரைத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக் கிறோம். அது நிறைவேறுவதை நாம் காண்கிறோம். அவருடைய மரம் சாட்சி கூறுவதை நாம் காண்கிறோம். அவருடைய பூக்கள் சாட்சி கூறுவதை நாம் காண்கிறோம். அவருடைய வார்த்தை சாட்சி கூறுவதை நாம் காண்கிறோம். அவருடைய ஆவி சாட்சி கூறுவதை நாம் காண்றோம்.
"நாங்கள் என்ன செய்ய வேண்டும், சகோ. பிரான்ஹாமே?"
240. விலகி வாருங்கள், உலகத்திலிருந்து விலகி வாருங்கள், இப்பொழுது நீங்கள் உள்ளே இருக்கும் காரியங்களிலிருந்து விலகி வாருங்கள். சார்ந்திருங்கள்...
"நாங்கள் எங்கே விழுவோம், சகோ. பிரான்ஹாமே?
241. தேவனுடைய கரங்களுக்கு ஓடிச் சென்று, 'கர்த்தாவே, என்னை நிப்பும், என்னை நிரப்பும். ஓ. கர்த்தாவே, சாட்சியாகிய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். பரிசுத்த ஆவி என் வழிகாட்டியாக இருப்பாராக. அவர் .... நான் ஒவ்வொரு நாளும், நான் கிறிஸ்தவன், நான் இதை செய்யக் கூடாது. அதை செய்யக்கூடாது என்று சொல்லித் திரிய வேண்டாம். நான் பரிசுத்த ஆவியினால் சக்தியைப் பெற்றுக் கொண்டு, அதன் விளைவாக என் ஆத்துமா சும்மா இருக்க முடியாத நிலையை அடையட்டும்" என்று கூறுங்கள்.
நீங்கள், "மூடமதாபிமானம் (fanaticism) என்றால் எனக்கு பயம் எனலாம்.
242. கவலைப்படாதீர்கள். நீங்கள் தேவனுடைய கரங்களில் இருக்கும் போது, மூட அபிதாமானம் சிறிதளவும் இருக்காது.
243. வேல்ஸ் நாட்டில் நடந்த எழுப்புதலின் போது அவர்கள் அந்த எழுப்புதலின் தலைவனிடம், "உமக்கு ஒரு கூட்டம் மூடமதாபிமானிகள் இருப்பார்கள்" என்றார்களாம்.
244. அவர் சொன்ன ஒரே வார்த்தை . நீங்கள் அமர்ந்திருங்கள். பரிசுத்த ஆவி தாம் விரும்பினதை செய்யட்டும். நீங்கள் அமர்ந்திருந்து, பரிசுத்த ஆவிக்கு இடம் கொடுங்கள்" என்றாராம். அப்பொழுது மூடமதாபிமானம் சிறிதளவும் கூட இருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் உண்மையாக ஆவியில் பிறந்தார்கள்.
245. பரிசுத்த ஆவியின் எழுப்புதல்! ஓ , தேவனே, அதை என் சிறு சபையின் மேல் அனுப்பும், பிதாவே! இந்த பழைய பாடலை நாங்கள் பாடும்போது ஜனங்களின் மேல் அதை அனுப்புவீராக. பிதாவே, இதை நாங்கள் பல முறை பாடி யிருக்கிறோம் :
அவர்கள் எல்லோரும் மேலறையில் ஒருமனப்பட்டு கூடியிருக்கையில் நமது கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி இறங்கினார்.
ஓ, கர்த்தாவே உமது வல்லமையை இப்பொழுதே
அனுப்பும் கர்த்தாவே, உமது வல்லமையை இப்பொழுதே
அனுப்பும் ஆம், ஓ கர்த்தாவே, உமது வல்லமையை
இப்பொழுதே அனுப்பி ஒவ்வொருவரையும் அபிஷேகியும்.
246. பிதாவாகிய தேவனே, சிறு பிள்ளைகளை ; கர்த்தாவே, இந்த அறையில் இன்று என் இரண்டு பெண்களும், இரண்டு பையன்களும் இருக்கின்றனர். கர்த்தாவே, இளைஞர்கள் ; கர்த்தாவே உமது வல்லமையை அவர்கள் மேல் அனுப்பு வீராக. இந்த இளைஞர்களுடன் மற்ற மனிதர்களும் ஸ்திரீ களும் உள்ளனர். இப்பொழுதே உமது வல்லமையை அனுப்பும்.
247. தாய்மார்களும் தகப்பன்மார்களும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருக்கால் அவர்கள் இன்று மரிக்க நேர்ந்தால், யோர்தானை தனிமையாக கடக்க வேண்டியதாயிருக்கும். ஓ தேவனே. அவர்கள் அங்கு வந்து, யோர்தானின் கரையை நெருங்கும்போது, அவர்களுடைய மூச்சு அவர்களை விட்டுப்போய், மின்னல் அடித்து, பாவத்தில் பிறந்த பாவசரீரத்தின் மீது யேகோவாவின் கோபாக்கினை இறங்கும். அலைகள் மோதும். இடி முழங்கும். அந்த பெரிய அலைகளும், ஆபத்தான மண்மேடுகளும். ஓ தேவனே, அவர்கள் இப்பொழுதே இயேசுவில் நங்கூரமிடப்பட்டு, அந்த நேரம் வரும்போது நதியிலுள்ள அந்த ஆபத்தான மண்மேடுகளின் வழியாய் அவர்களை நடத்தக் கூடிய ஒரு நங்கூரம் உள்ளதென்றும், மின்னலோ அல்லது வேறெதுவோ அவர்களை மூழ்கடிக்க முடியாதென்றும், அவர்கள் இயேசுவுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்களாக, கர்த்தாவே, இதை அருளும்.
248. எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும்.
249. கர்த்தாவே, நாங்கள் சபையை சேர்ந்துகொள்வதில் திருப்தியடையாதிருப்போமாக. ஏதோ ஒரு சுயமுயற்சியினால் கிறிஸ்தவனாயிருக்க முயன்று, ஏதாவதொரு வழியில் ஏதாவ தொன்றை உற்பத்தி செய்ய முயன்று, "நான் சபையை சேர்ந்து கொண்டேன். நான் கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்று ஜனங்கள் என்னிடம் எதிர்பார்ப்பார்கள். இதை நான் செய்யக் கூடாது, அதை இனிமேல் செய்யக் கூடாது. ஏனெனில் நான் ஒரு கிறிஸ்தவன்" என்று சொல்லாதிருப்போமாக. ஓ தேவனே, நாங்கள் அந்த பரிசேய நிலையிலிருந்து, அந்த மாய்மாலக் கூட்டத்தினரிடமிருந்து விலகுவோமாக. ஓ தேவனே, நான் கூற விரும்புவதை பரிசுத்த ஆவியானவர் விளக்கித் தரு வாராக. அதை கூற எனக்குப் போதிய சொற்கள் கிடைக்கவில்லை. நாங்கள் சுயமுயற்சி கொண்ட பரிசேயராய் இருக்க விரும்பவில்லை.
250. தேவனே எங்களை ..... தெய்வீகத்தினால் நிரப்புவீராக. எங்கள் ஆத்துமாக்கள் கொழுந்து விட்டு எரியும் மட்டும் உமது வல்லமையினாலும் சக்தியினாலும் நிரப்புவீராக. அப்பொழுது அவரே எங்கள் பராக்கிரமமாயிருப்பார், எங்கள் சாட்சி தேவனைப் பற்றியதாயிருக்கும். எங்களுடைய வார்த்தைகள் அவருடையவைகளாயிருக்கும். பிசாசுகள் நடுங்கும். கர்த்தாவே, உலகம் அசைந்து, அதன் மோதலின் விளைவினால் ஆட்டம் கொடுக்கும். கர்த்தருக்கு காத்திருக்க விரும்பும் மக்களை மாத்திரம் நீர் கண்டுபிடித்தால்!
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புது பெலன்
அடைந்து கழுகைப் போல செட்டையடித்து எழும்பி
சென்றிடுவர் அவர்கள் ஓடினாலும் இளைப்படைவதில்லை, நடந்தாலும்
சோர்ந்து போவதில்லை ஓ , காத்திருக்க எனக்குக் கற்பியும் கர்த்தாவே,
எனக்குக் கற்பியும் கர்த்தாவே!
இருதயங்கள் கொழுந்து விட்டு எரியும்போது,
காத்திருக்க எனக்குக் கற்பியும் (தேசத்தில் பெரிய எழுப்புதல் கூட்டங்கள் நடைபெற்று அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களைப் பெற்றுக்கொண்டுள்ள தாக கூறுகின்றனர், கர்த்தாவே ; இப்படிப்பட்ட கவர்ச்சியான பேச்சு) என் பெருமையை நான் தாழ்த்தி, உமது நாமத்தைக் கூப்பிடுவேனாக என் விசுவாசத்தைப் புதுப்பித்து, என் கண்கள் உம் மேல் நோக்கமாயிருக்கச் செய்யும் கர்த்தாவே, இவ்வுலகில் நான் என்னவாயிருக்க விரும்புகிறீரோ , அதுவாயிருக்கும்படி செய்யும்.
251. இக்காலை வேளையில் நமது பலவீனமான படகுகளை, நாம் மிதமிஞ்சி எண்ணியிருக்கும் இந்த அவமானமுள்ள மாம்சத்தினாலான சிறு கூடாரத்தை பிரதிஷ்டை செய்வோம். இந்த மாம்ச சரீரத்தை சௌகரியமாக வைத்திருக்க அநேக நாட்கள் உழைக்கிறோம். நாம் அழகான வீடுகளில் வாழ்ந்து அருமையான கார்களில் பயணம் செய்கிறோம். ஓ தேவனே, எங்கள் கண்களை அதன் மேல் செலுத்தி, செலுத்தப்பட்ட இந்த மகத்தான கிரயத்திலிருந்து எங்கள் கண்களை எடுத்து விடுகிறோம். ஓ தேவனே, இவைகளை இந்த பூமியில் விட்டுச் செல்ல வேண்டியவர்கள் என்பதை அறிந்தவர்களாய், இந்த பலவீனமான சிறு காரியங்களை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு, தேவனுடைய சாட்சியாகிய பரிசுத்த ஆவி என்னும் அந்த பரலோகப் பொக்கிஷத்தை நாடுவோமாக.
252. காரிய சித்தி (success) தேவனுக்கு சாட்சியாயிருப்ப தில்லை. ஆவியானவரே தேவனுக்கு சாட்சியாயிருக்கிறார். நமது ஸ்தாபனங்கள் வளர்ந்தாலும், நமது சபை வளர்ந்தாலும், நமக்கு அநேக அங்கத்தினர்கள் இருந்தாலும், நாம் நன்றாக உடுத்தாலும், நாம் சிறந்த கார்களை ஒட்டினாலும், நாம் நல்ல உணவு உண்டாலும், அதனால் என்ன பயன்? இவைகளை நாம் விட்டுச் செல்ல வேண்டும். அன்று போராடிக் கொண்டிருந்த என் தாயாருக்கு அது என்ன நன்மை பயத்திருக்கும்? கர்த்தாவே, இவை ஒன்றுமற்றவை என்பதை உணருகிறேன்.
253. நமது பார்வை இயேசுவின் மேலும் பரிசுத்த ஆவி யின் மேலும் இருக்கட்டும். அவர் நமக்குள் வந்து சாட்சியாயிருப்பாராக. கர்த்தாவே, நாங்கள் அவருடைய சாட்சிகளா யிருப்போமாக. அந்த நிலையில் நாங்கள் உறுதியாய் நிற்போமாக.
254. இன்று காலை இந்த பிரசங்க பீடத்தின் மேல், வியாதியஸ்தரிடமிருந்தும் ஊனமுற்றவர்களிடமிருந்தும் வந்துள்ள சிறு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவனே, நேற்று இச்செய்தியை எனக்களித்த தேவன்; இன்று காலை சகோ. ஹிக்கின்பாதம்ஸ் மூலம் பேசி, அது வருமென்று முன்னுரைத்த தேவன்; தரிசனங்களைக் காண்பிக்கும் தேவன் பேசுவாராக!
255. நான் ஒவ்வொரு பிசாசுக்கும் சவால் விட்டு, இந்த பர்வதத்தை விசுவாசத்தால் எதிர்க்கிறேன். பெரிய பர்வத மாகிய வியாதியே, கர்த்தருக்கு முன் நீ எம்மாத்திரம்? நீ சமபூமியாவாய். மரணக்கடலே தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு நீ எம்மாத்திரம்? உன் வழியைத் திறந்து கொடு. நாங்கள் உன் வழியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு செல்லப் போகிறோம்.
256. இவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும், கர்த்தாவே . தற்பொழுது இங்கு உட்கார்ந்திருக்கும் வியாதிப்பட்ட ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவீராக.
257. வியாதியே, நீ யார்? உன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறாய்? சாத்தானே, நீ யாரென்று உரிமை பாராட்டிக் கொள்கிறாய்? நீ உரிமை கோரும் ஒவ்வொன்றும் கல்வாரியில் ரத்து செய்யப்பட்டு விட்டது. நீ பொய்காரன். உனக்கு ஒரு உரிமையும் கிடையாது. பரிசுத்த ஆவி நிறைந்த சரீரமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு சவால் விடுகிறோம். என் வாழ்க்கையில் என்னை வழி நடத்தின தேவன், எனக்கு தரிசனங்களை அருளி அவருடைய வார்த்தைகளை உரைத்து அதை நிறைவேறப் பண்ணும் தேவன் தாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் இக்காலை வேளையில் ஜனங்களிடம் காணப்படும் ஒவ்வொரு வியாதியையும் போக்குவாராக.
258. "நீங்கள் ஒன்றை உரைத்து, நீங்கள் சொன்ன படியே ஆகும் என்று சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்வீர்கள்" என்று நீர் கூறியிருக்கிறீர். அதை கூறியது யார்? தேவனுடைய சாட்சி.
259. அந்த வார்த்தை உண்மையென்று இன்று காலை நான் சாட்சி கூறுகிறேன். எனவே சாத்தானே நீ இங்கிருந்து போகத்தான் வேண்டும்.
260. இங்குள்ள ஒவ்வொரு நபரும் இப்பொழுதே சுகமடைய முடியும். தேவனுடைய வல்லமை அவர்கள் மேல் இறங்கி, ஒவ்வொருவரையும் சுகப்படுத்த முடியும். விசுவாசம், விசுவாசம். அந்த உண்மையான விசுவாசம் - "ஒருக்கால் நடக்குமென்று நம்புகிறேன், அது நன்மை செய்யக் கூடும்" என்றல்ல. அந்த வார்த்தையை உரைத்த அதே தேவன் இந்த ஜனங்களின் மீது இறங்குவார் ! இவர்களை விசுவாசத்தினால் நிரப்பும். இவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பும். கர்த்தாவே, இவர்களை நிரப்பி சாட்சிகளாகச் செய்யும். அப்பொழுது நாங்கள் இந்த பகுதியில் உமக்கு சாட்சிகளாக இருப்போம் - நீர் ஜீவிக்கிறீர் என்பதற்கு சாட்சியாக, ஒரு உண்மையுள்ள சாட்சியாக.
261. இன்றிரவு நாங்கள், எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்துக்கு எடுத்துக்காட்டாய் உள்ள அப்பத்தை புசிக்கவும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணவும் இராப்போஜன மேசைக்கு வரப்போகிறோம்.
262. தேவனே, பாவமுள்ள எங்கள் இருதயங்களைக் கழுவும். நான் எனக்காகவும் என் சபைக்காகவும் கதறு கிறேன். கர்த்தாவே, நாங்கள் பலவீனர், நாங்கள் அபாத்திரர். நாங்கள் உரிமை கோரும் ஒரு சபை , ஆனால் நாங்கள் உரிமை கோருபவைகளை செயல்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவி எங்களை முழுமையாக ஆட்கொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை. நாங்கள் பாவமுள்ளவர்கள், நாங்கள் சந்தேகமுடையவர்கள் என்னும் அர்த்தத்தில் கூறுகிறேன். நாங்கள் பயப்படுகிறோம்.